நானும் சிம்புவும் நல்ல நண்பர்கள்: ஹன்சிகா!!!

Friday,3rd of May 2013
சென்னை::நான், சிம்புவை காதலிப்பதாக கூறி வரும் செய்தியை நம்ப வேண்டாம் என்று ஹன்சிகா தெரிவித்துள்ளார்.
 
சிம்பு படங்களுக்கு கொடுத்த பின்னர் மிச்சம் இருக்கும் கால்ஷீட்டை மட்டும் பிறருக்கு கொடுப்பதால், ஹன்சிகா சிம்புவின் ஆள் என்று கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்க ஆரம்பித்துள்ளனர். இந்த செய்தி ஹன்சிகாவின் காதுக்கு எட்டியபோது அப்படியே அதிர்ந்து போய் விட்டாராம். ஆனால் இதனை மறுத்துள்ளார் ஹன்சிகா. மேலும் நானும் சிம்புவும் நண்பர்கள் என்று கூறியுள்ளார்.
 
இது குறித்து அவர் குறிப்பிட்டதாவது: சிம்புவுடன் இணைந்து இரண்டு படங்களில் நடிக்கிறேன் என்பதற்காக தவறாக பேசுவது நியாயமானது இல்லை. நானும், சிம்புவும் நல்ல நண்பர்கள் மட்டுமே. எல்லா நடிகர்களையும் போல தான் அவருடன் பழகி வருகிறேன். மேலும் சிம்பு படங்களுக்கு கொடுத்த கால்ஷீட்டுக்கு பிறகுதான் மற்ற படங்களுக்கு கொடுக்கிறேன் என்பது சுத்தப்பொய். எனது கால்ஷீட்டிற்காக அவரும் காத்திருக்கிறார். சிம்புவைக் காதலிப்பதாக வரும் செய்திகளை ரசிகர்கள் யாரும் நம்ப வேண்டாம்" என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார் ஹன்சிகா.
 
7 படங்களில் தொடர்ச்சியாக நடித்துக் கொண்டிருக்கும் ஹன்சிகா, சிம்புடன் வேட்டை மன்னன், வா
 
லு என இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.

Comments