சந்தானத்தின் ஏஞ்சலினா ஹன்சிகாவாம்!!!

Friday,17th of May 2013
சென்னை::ஆர்யா - சந்தானம் ஆகிய இரண்டு பேரும் இணைந்து நடித்தால், அந்த படத்தில் நடிக்கும் கதாநாயகியின் கதி, அதோகதி தான். கதாநாயகியை தினமும், கலாய்த்து, ஒரு வழியாக்கி விடுவர். அப்படி,  அவர்களிடம், "சேட்டை படத்தில் நடித்த போது, நொந்து நூடூல்ஸ் ஆனவர் தான், ஹன்சிகா. ஆனால், ஆர்யாவுடன் சேர்ந்து, ஹன்சிகாவை கலாய்த்த சந்தானம், "தீயா வேலை செய்யணும் குமாரு படத்திற்காக சித்தார்த் - ஹன்சிகாவுடன் இணைந்து நடித்த போது, அவரை எந்நேரமும் புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தாராம். மேலும், ஸ்பாட்டில் அனைவரும் ஹன்சிகாவை, சின்ன குஷ்பூ என்று சொல்ல, சந்தானமோ, "என் பார்வைக்கு அவர், ஏஞ்சலினா ஜோலி போல் காட்சி தருகிறார் என்று, புகழ்ந்தாராம். 

Comments