ஒருநாள் முழுக்க ஓய்வு கிடைச்சா என்னபண்ணுவீங்க?செல்போனை ஆஃப் பண்ணிட்டு நல்லா தூங்குவேன்:நடிகை தன்ஷிகா !!!

Tuesday,14th of May 2013
சென்னை::ஒருநாள் முழுக்க ஓய்வு கிடைச்சா என்னபண்ணுவீங்க?
செல்போனை ஆஃப் பண்ணிட்டு நல்லா தூங்குவேன்.

பர்ஸ்ல பாதுகாத்து வச்சிருக்குற பொருள்?
ஜெபமாலை, குங்குமம்... இந்த ரெண்டும் எப்பவும் என் பர்ஸ்ல இருக்கும்.
புது பேனா வாங்கின உடனே எழுதும் முதல் வார்த்தை?
‘தன்ஷிகா’ - என் பேரை எழுதிட்டுதான் மற்ற வேலையே!

திடீர்னு கடவுள் உங்க முன்னாடி வந்து நின்னா என்ன கேப்பீங்க?
இந்த உலகத்துல வறுமையே இருக்கக் கூடாது, மனிதர்கள் எல்லாரும் நிம்மதியாசந்தோஷமா வாழணும்...

டைரி எழுதுற பழக்கம் இருக்கா?
ரெகுலரா எழுதுற பழக்கம் இல்ல. ஆனா, தாங்க முடியாத சோகம் வந்துட்டா டைரிய தேடி எடுப்பேன். கவலை தீரும் வரை டைரி எழுதுவேன்.

ஸ்கூல்ல டீச்சர்ஸ்கிட்ட அடி வாங்கி இருக்கீங்களா?
நான் வாங்காத அடியா? பயங்கர வாலு நான். ஆனா, எவ்ளோ வாங்கினாலும் சத்தமே வராது. டென்த் படிக்கிறப்போ டீச்சர்ஸ் மேல லேசர் லைட் அடிச்சு மாட்டிக்கிட்டேன். அப்போ விழுந்த அடியை மறக்கவே முடியாது!

உங்ககிட்ட உங்களுக்கு ரொம்பப் பிடிச்சது?
இரக்க குணமும் தைரியமும்... சில நேரங்கள்ல இதுவே எனக்கு பிரச்னையா மாறிடுது!

‘பரதேசி’ படத்துல டீ எஸ்டேட்ல வேலை செய்யற மாதிரி நடிச்ச அனுபவம்?
டீ எஸ்டேட்டை அதுக்கு முன்னாடி பார்த்ததில்லை. அதனாலே மூணுநாள் முன்னாடியே ஸ்பாட்டுக்கு போய் எப்படி வொர்க் பண்ணுறது, எந்த இலையை பறிக்கணும்கறதை எல்லாம் தெளிவா கத்துக்கிட்டேன். ரொம்ப கஷ்டமான வேலைங்க.

அட்டைப்பூச்சி, உண்ணிக்கிட்ட எல்லாம் கடி வாங்கிட்டு வேலை பார்த்த அந்த நாட்களை நினைச்சாலே படபடப்பா இருக்கு.

தமிழ் சினிமா இன்டஸ்ட்ரியில நீங்க வியந்து பார்க்கும் நடிகை?
சிம்ரன்... அவங்களோட நடிப்பு, டான்ஸ், ஸ்ட்ரக்சர்னு எல்லாமே செம க்ளாஸ். ஐ லவ் சிம்ரன்!

சமீபத்துல உங்களை ரொம்ப டென்ஷன் பண்ணின விஷயம்?
‘பரதேசி’ பட ஷூட்டிங்ல எனக்கு குழந்தையா நடிச்ச பொண்ணு. ஷூட்டிங் ஆரம்பிக்கிற வரை நல்லா சிரிச்சு பேசிட்டு இருப்பா. கேமரா ரன் ஆகி, டைரக்டர் ‘ஆக்ஷன்’ சொல்லிட்டா போதும்... உடனே அழுகை ஸ்டார்ட் ஆயிடும். அவளோட அழுகை, கேமரா, கூடை, அட்டைப்பூச்சி, காஸ்ட்யூம்னு எல்லாத்தையும் ஒரே நேரத்துல சமாளிக்க முடியலை. அந்தளவுக்கு என்னை டென்ஷன் பண்ணிட்டா அந்த குட்டிப் பாப்பா!

 லீவ் கிடைச்சா எந்த ஊருக்குப் போக விருப்பம்?
மொரீஷியஸ், பிரான்ஸ் போகணும்னு ரொம்ப நாள் ஆசை.

ஃபேஸ்புக்கில் நீங்க சும்மா லைக் போடுற கோஷ்டியா? கலக்கல் கமென்ட் கோஷ்டியா?
நான் எப்பவும் லைக் கோஷ்டிதான். தாறுமாறா கமென்ட் போட்டு, அதுக்கு எத்தனை லைக் வருதுன்னு எண்ணிட்டு இருக்குறது போர். ஒரு பட்டனை பிரஸ் பண்ணி நாமளும் ஆக்டிவா இருக்கோம்னு தெரிய வைக்க லைக் பட்டன் போதுமே!

யார்கிட்ட ஆட்டோகிராப் வாங்க ஆசை?
‘தி கிரேட்’ ரஜினி சார்கிட்டதான்! சின்ன வயசுல இருந்தே ஆசை... இன்னும் நிறைவேறலை.
கடலும் கடல் சார்ந்த இடமும்...
மலையும் மலை சார்ந்த இடமும்...

தன்ஷிகாவின் ரசனை என்ன?
நான் கடலின் ரசிகை. ராமேஸ்வரம் போனப்போ போட்ல போற வாய்ப்பு கிடைச்சது. நடுக்கடல்ல போயிட்டு இருந்தப்போ, ஆர்வம் அதிகமாகி தொப்புன்னு கடல்ல குதிச்சுட்டேன். அப்போ எனக்கு நீச்சல் கூடத் தெரியாது. கூட வந்தவங்கதான் என்னைக் காப்பாத்தினாங்க. இன்னிக்கும் கடலைப் பார்த்தா செம ஆட்டம்தான்!

உங்களை நிலைகுலைய வைப்பது?
மரணம்... நம்ம கூடவே இருக்கும் ஒருத்தர் திடீர்னு இல்லாம போயிட்டா வர்ற வலியை ஈடுகட்டவே முடியாது.

செல்போன்ல நீங்க அடிக்கடி விளையாடுறது?
‘டெம்பிள் ரன்’ விளையாட ஆரம்பிச்சா சாப்பிடறதைப் பத்திக்கூட யோசிக்க மாட்டேன்.

உங்களுக்குப் பிடிச்ச நகைச்சுவை வசனம்?
‘எவ்வளவோ பண்ணிட்டோம்... இதப் பண்ண மாட்டோமா?’
கிராமத்துப் பொண்ணு...
பட்டணத்துப் பொண்ணு...

யாராக இருக்க ஆசை?
கிராமத்துப் பொண்ணு மாதிரி வெள்ளந்தி மனசும் பட்டணத்துப் பொண்ணு மாதிரி தோற்றமும் இருந்தா டபுள் ஓகே!

அம்மாவின் மடி... உங்களுக்கு?
நான் அப்பா செல்லம். அதனால எப்பவும் அப்பா மடியிலதான் தூங்குவேன். தூங்கும்போது அப்பா தலையை வருடிக் கொடுப்பார். அதுல அளவில்லாத அன்பும் அக்கறையும் தெரியும். அந்த நேரத்துல அம்மா, அப்பா ரெண்டு பேருமா அப்பா தெரிவார்.

செடி வளர்க்குறதுல ஆர்வம் இருக்கா?
நல்லா வளர்ந்த தொட்டிச் செடி பிடிக்கும். சின்ன சைஸ் செடிகளை வாங்கவே மாட்டேன். ஒருவேளை அது கருகிப் போச்சுன்னா மனசுக்கு கஷ்டமா இருக்கும்.

Comments