சந்தித்ததும் சிந்தித்ததும்’ படத்தின் கதாநாயகன் நாமக்கல் குமார் முதல் ஆக்ஷன், காமெடி இரண்டிலும் கலக்கியுள்ளார்!

Monday,27th of May 2013
சென்னை::*முதல் படத்திலேயே ஆக்ஷன், காமெடி இரண்டிலும் கலக்கியுள்ளார் *நாமக்கல் குமார்*

சந்தித்ததும் சிந்தித்ததும்’ படத்தின் கதாநாயகன் நாமக்கல் குமார் முதல்
படத்திலேயே நடிப்பு மட்டுமல்லாமல் ஆக்ஷன், காமெடி இரண்டிலும் கலக்கியுள்ளார்.‘நாடோடிகள்’ படத்தில் இடம்பெற்ற ஸ்ரீகௌரி அம்மன் இண்டஸ்டிரியல்ஸ் லாரி பாடி பில்டிங் நிறுவனம் நாமக்கல் குமாரின் சொந்த கம்பெனி. சிறு வயதிலிருந்தே
நடிப்பு மீது இருந்த ஆர்வம், ‘நாடோடிகள்’ படப்பிடிப்பைப் பார்த்தவுடன்
அதிகமாயிற்று. உடனே நடிப்பு, நடனம், சண்டைப் பயிற்சியை முறையாகக் கற்று வந்த
 
சூழ்நிலையில் இயக்குனர் பாலு ஆனந்த் இயக்கும் ‘சந்தித்ததும் சிந்தித்ததும்’
படத்தில் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு நாமக்கல் குமாருக்குக் கிடைத்தது.
முதல் நாள் படப்பிடிப்பில் சுற்றியிருப்பவர்களைப் பார்த்து நடிக்கக்
கூச்சப்பட்டேன். உடனே இயக்குனர் பாலு ஆனந்த் சார், “சுற்றியிருப்பவர்களை
மறந்துவிடு. உன் முன்னால் கேமிரா இரு
ப்பதையும் மறந்து விடு. இந்தப் படத்தின் கதை உண்மைச் சம்பவம். அதனால் அந்தக் கேரக்டராகவே மாறி, உணர்வுப்பூர்வமாக நடி எனக் கூறி நடித்துக் காட்டினார்.
 
 நானும் அவர் சொன்னபடியே நடித்து முடித்தவுடன் யூனிட்டில் உள்ள அனைவரையும் கைத்தட்டச் சொல்லி நான் நன்றாக நடிக்க உற்சாகப்படுத்தினார் இயக்குனர் பாலு ஆனந்த்.சந்தித்ததும் சிந்தித்ததும்’ படத்தில் பஸ் கண்டக்டராக வருகிறார் நாமக்கல்
குமார். ‘பஸ் கண்டக்டராக வாழ்க்கையைத் தொடங்கி சினிமாவில் சூப்பர் ஸ்டாராக ஆன
ரஜினிகாந்த் போல, முதல் படத்தில் பஸ் கண்டக்டராக நடிக்கும் நீ சினிமாவில்
பெரிய நடிகராக புகழ் பெறுவாய்!’ என பிரபலங்கள் பலர் இவரைப் பாராட்டியதைசந்தோஷமாகச் சொல்கிறார் நாமக்கல் குமார்.
 
பாலு ஆனந்த், கஞ்சா கருப்பு, கொட்டாச்சி, கிங்காங் ஆகியோர் கூட்டணியில்
‘சந்தித்ததும் சிந்தித்ததும்’ படத்தில் காமெடியில் வெளுத்து வாங்கியுள்ளார்
நாமக்கல் குமார்.விரைவில் வெளிவரவுள்ள ‘சந்தித்ததும் சிந்தித்ததும்’ படத்தைத் தொடர்ந்து துப்பார்க்கு துப்பாய’, ‘ரெண்டுல ஒண்ணு’ ஆகிய படங்களில் கதாநாயகனாக ஒப்பந்தமாகியுள்ளார்.
 
 லாரி பாடி பில்டிங் உரிமையாளர் என்பதாலோ என்னவோ தனது
உடம்பையும் பாடி பில்டர் போலக் கட்டுக்கோப்பாக வைத்துள்ளார் நடிகர் நாமக்கல் குமார்.

Comments