நீண்ட இடைவெளிக்குப் பிறகு காஷ்மீரில் படமான 'நினைத்தது யாரோ'!!!


Saturday,11th of May 2013
சென்னை::பல வெற்றிப் படங்களை இயக்கிய விக்ரமன் தற்போது இயக்கிக் கொண்டிருக்கும் படம் 'நினைத்தது யாரோ'.

இந்த படத்தை அபிஷேக் பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பாக பி. ரமேஷ், இமானுவேல் இருவரும் இணைந்து அதிக பொருட்செலவில் தயாரிக்கிறார்கள்.

இந்த படத்தில் ரஜித் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக நிமிஷா நடிக்கிறார். இவர்களுடன் கார்த்திக் யோகி, அஸார், அஷ்வத், ரித்விகா, சுபிக்ஷா, அதுல்யா, சாய் பிரசாத், கிரி, லியோ, பினிஷ், ஷ்யாம் சுந்தர், ஸ்வேதா குப்தா, ஷாமிலி, சமீரா, ஷபானா, பிரதீப், எல்விஎல் , மணிபாரதி, விஷ்ணு, ரஞ்சித், பானு, பாலசுந்தரி, இந்து ஆகியோர் நடிக்கிறார்கள்.

இப்படத்தின் இரண்டு பாடல் காட்சிகளை இயக்குநர் விக்ரமன் காஷ்மீரில் படமாக்கிவிட்டு வந்துள்ளார். பாதுகாப்பு காரணங்களுக்குக்காக தற்போது தமிழ் திரையுலகத்தினர் காஷ்மீர் பக்கமே போவதில்லை. அப்படியிருக்க நீண்ட இடைவெளிக்குப் பிறகு காஷ்மீரில் படப்பிடிப்பு நடத்திய பெருமை இப்படத்திற்கு கிடைத்திருக்கிறது.

இது பற்றி கூறிய இயக்குநர் விக்ரமன், "முழுக்க முழுக்க புதிய நடிகர்களை வைத்து இளைய தலைமுறை ரசிகர்களை வைத்து படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறேன்.

இப்படத்திற்காக ரஜித் – நிமிஷா பங்கேற்ற இரண்டு பாடல்க காட்சிகள் , "கொஞ்சம் புன்னகை, கொஞ்சம் காதல், அழகிய காதல்" என்ற பாடலும், "மனசே லேசா, ரிங்கா ரிங்கா ரோசா" என்ற பாடல் காட்சியிலும் ரஜித் – நிமிஷா பங்கேற்க காஷ்மீரில் உள்ள பெகல்காம் என்ற இடத்தில் ராபர்ட் நடன அமைப்பில் படமாக்கப்பட்டது.

தமிழ்நாட்டிலிருந்து படப்பிடிப்புக்கு வந்திருக்கிறோம் என்றவுடன் காஷ்மீர் போலீஸ் தங்களது படையுடன் வந்து பாதுகாப்பு கொடுத்து எந்த தொந்தரவும் இல்லாமல் ஒத்துழைப்பு கொடுத்தனர்.

எனக்கு தெரிந்து ரஜினி நடித்த 'வேலைக்காரன்' படத்திற்குப் பிறகு 'நினைத்தது யாரோ' படப்பிடிப்பை நாங்கள்தான் காஷ்மீரில் நடத்தி இருக்கிறோம்.

காஷ்மீரில் படப்பிடிப்பு என்றவுடன் வேண்டாமே பாதுகாப்பு, பிரச்சனை ஏற்படுமே என்று நிறைய நண்பர்கள் பயமுறுத்தினர். ஆனால், எந்த பிரச்சனையுமே ஏற்படவில்லை என்பதுதான் யதார்த்தம்.

'நினைத்தது யாரோ' பாடல்கள் மட்டுமல்ல, படமும் பிரமாதமாக வந்திருக்கிறது என்று கூறிய விக்ரமன், காஷ்மீரில் 10 அடிக்கு ஒரு ராணுவ வீரர் என்ற கணக்கில் காஷ்மீர் முழுக்க ராணுவ வீரர்கள் பாதுகாப்பு அரண் அமைத்து அங்கு வருகிறவர்களை பாதுகாக்கிறார்கள் என்ற கூடுதல் தகவலையும் சொன்னார். 

Comments