'ஜில்லா' படப்பிடிப்பில் பிறந்தநாள் கொண்டாடிய மோகன்லால்!!!

Thursday,23rd of May 2013
சென்னை::மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் தனது 53 வயது பிறந்தநாளை ஜில்லா படத்தின் படப்பிடிப்பில் கேக் வெட்டி கொண்டாடினார்.

1980ஆம் ஆண்டு வெளியான 'மஞ்சில் விரிஞ்ச பூக்கள்' என்ற படத்தின் மூலம் வில்லன் நடிகராக அறிமுகமான மோகன்லால், படிபடியாக உயர்ந்த மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டாராக ஆனார். தனது நடிப்பின் மூலம் இந்திய சினிமாவில் முக்கியமான நடிகராக வலம் வரும் மோகன்லால், தற்போது விஜய் நடிக்கும் ஜில்லா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பூர்ணிமா பாக்யராஜ் நடிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு சாலக்குடியில் நடந்து வருகிறது. இந்த படப்பிடிப்பில் மோகன்லால் தனது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினார். அவருக்கு படக்குழுவினர் வாழ்த்து தெரிவித்தனர்.

Comments