ரஜினிக்கு ஜோடியாகும் வித்யாபாலன்!!!

Monday,29th of April 2013
சென்னை::கோச்சடையான் படத்தை முடித்து விட்ட ரஜினி, கேன்ஸ் படவிழாவில் அப்படத்தை திரையிடவும் முடிவெடுத்துள்ளாராம். அதையடுத்து ஜூன் மாதத்தில் படத்தை வெளியிட்ட கையோடு தனது அடுத்த புதிய பட வேலைகளிலும் இறங்குகிறாராம். அந்த படத்திற்கான கதை, இயக்குனர், தயாரிப்பு நிறுவனம் என அனைத்தும் முடிவாகி விட்டபோதும், கோச்சடையான் திரைக்கு வரும்வரை அடக்கிவாசிக்கப்போகிறார்களாம்.

இருப்பினும், புதிய படத்தில் ரஜினிக்கு ஜோடியாக வித்யாபாலன் நடிப்பார் என்று செய்திகள் கசிந்துள்ளன. கேன்ஸ் பட விழாவில் படங்களை தேர்வு செய்யும் 9 பேர் கொண்ட நடுவர் குழுவில் வித்யாபாலனும் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ளார். அதே விழாவுக்கு ரஜினியும் செல்லவிருப்பதால, அப்போது தனது படத்தில் அவரை நடிக்க வைப்பது குறித்து ரஜினி பேசுவார் என்றும் கூறப்படுகிறது.

Comments