ஹன்சிகாவை கவர்ந்த இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன்!!!

Sunday,14th of April 2013
சென்னை::சினிமா நடிகைகள் மீது ரசிகர்களுக்கு மோகம் என்றால்,  நடிகைகளுக்கெல்லாம் கிரிக்கெட் வீரர்கள் மீது மோகமாக இருக்கிறார்கள். அந்த வகையில் லட்சுமிராய் தோனிக்கு நெருக்கமானவர் என்பது உலகறிந்த விசயம். இந்த நிலையில், இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான கெவின் பீட்டர்சனின் தீவிர ரசிகையாக இருக்கிறார் ஹன்சிகா.

அவர் விளையாடும் கிரிக்கெட் மேட்ச் என்றால், டி.வி முன்பு அமர்ந்து அவர் அடிக்கும் ஒவ்வொரு பேட்டுக்கும் சதா கைதட்டி ஆரவாரம் செய்து கொண்டேயிருப்பாராம். அப்படிப்பட்ட ஹன்சிகா, சமீபத்தில் தீயா வேலை செய்யனும் குமாரு படத்துக்காக ஜப்பான் சென்றபோது எதேச்சையாக அங்குள்ள விமான நிலையத்தில் கெவினை பார்த்தாராம். அவ்வளவுதான், கையிலிருந்து பொருட்களை அப்படி அப்படியே கீழே போட்டு விட்டு, ஓடிச்சென்று கெவினை கட்டித்தழுவிக் கொண்டாராம்.

அதையடுத்து, அவரிடம் ஆட்டோகிராப் வாங்கிய ஹன்சிகா, சில நிமிடங்கள் அவரைப்பற்றியும் அவரது விளையாட்டுகளைப் பற்றியும் பேசிவிட்டு விடைபெற்றாராம். அதோடு, அந்த பொன்னான நேரத்தில் கெவினுடன் நின்று விதவிதமான போட்டோக்களையும் எடுத்துக்கொண்ட ஹன்சிகா,  அவற்றை தனது கோலிவுட் நண்பர்களுக்கு மெயில் பண்ணி வைத்திருக்கிறார்.

Comments