பட்டத்து யானை' படத்தில் இரட்டை வேடங்களில் சந்தானம்!!!

Tuesday,30th of April 2013
சென்னை::பட்டத்து யானை' படத்தில் நகைச்சுவை நடிகர் சந்தானம் இரட்டை வேடங்களில் நடிக்கிறார்.
 
பூபதி பாண்டியன் இயக்கத்தில் விஷால் நடித்தி வரும் திரைப்படம் 'பட்டத்து யானை'. இந்தப் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா அர்ஜூன் நடிக்கிறார். இவர்களுடன் இணைந்து சந்தானம், ஜெகன், மயில்சாமி, மனோபாலா, காதல் சுகுமார், கிருஷ்ணமூர்த்தி, பட்டிமன்றம் ராஜா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். தமன் இசையமைக்கிறார். மைக்கேல் ராயப்பனின் குளோபல் இன்போடைன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது.
 
படத்தில் நகைச்சுவை நடிகர் சந்தானம் முதன்முறையாக இரட்டை வேடங்களில் வருகிறார். பொதுவாக சந்தானம் சிங்கிள் வேடத்தில் வந்தாலே திரையரங்குகள் அதிரும் பட்சத்தில் இந்தப் படத்தில் இரட்டை வேடங்களில் வந்து நம்ம அனைவரையும் மேலும் மகிழ்ச்சி படுத்த வருகிறார்.

Comments