Saturday,30th of March 2013
சென்னை::ஜிஸம் 2 படத்தில் அறிமுகமான பிரபல நீலப்பட நடிகை சன்னி லியோன் விரைவில் விளம்பரங்களிலும் தோன்ற உள்ளார்.
கனடா வாழ் இந்தியரான சன்னி லியோன் நீலப்படங்களில் நடித்து பிரபலமானவர். இவரை ஜிஸம் 2 படத்தில் நடிக்க வைத்தனர். படத்தில் நடித்ததன் வழியாக சன்னி லியோனின் நீலப்பட இமேஜ் இந்தியாவில் கரையத் தொடங்கியது. விலங்குகள் பாதுகாப்பு குறித்த நிகழ்ச்சி உள்பட பல நிகழ்ச்சிகளில் சன்னி லியோன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பாலிவுட் இவரிடம் காண்பிக்கும் பவ்யம் ஆச்சரியம் தரக்கூடியது.
ஜிஸம் 2 தோல்வியடைந்ததால் சன்னி லியோனின் சினிமா வாழ்க்கை அஸ்தமித்ததாகதான் பலரும் கருதினர். சன்னி லியோன்கூட அப்படிதான் கருதினாராம். அது முற்றிலும் தவறு. ராகினி எம்எம்எஸ் 2 படத்தில் இரண்டரை கோடி ரூபாய் தந்து சன்னி லியோனை ஒப்பந்தம் செய்தனர். தென்னிந்தியாவில் முன்னணியில் இருக்கும் நயன்தாரா, அனுஷ்கா வாங்குவதைவிட ஒன்றேகால் மடங்கு அதிகம்.
Shootout At Wadala படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருக்கிறார் சன்னி லியோன். நாளுக்குநாள் இவரை கூகுளில் தேடுகிறவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் சன்னி லியோனை விளம்பரத் தூதுவராக்கினால் பொருட்களை விற்றுவிடலாம் என சில கார்ப்பரேட் நிறுவனங்கள் நினைக்கின்றன. ஒரு ஒப்பந்தமும் போடப்பட்டிருப்பதாக தகவல்.
இணையத்தில் ரகசியமாக தேடிக்கொண்டிருந்த சன்னி லியோன் விரைவில் உங்கள் வரவேற்பறைக்கே வரப்போகிறார். சினிமாவிலும், விளம்பரத்திலும் தோன்ற குறுக்குவழி நீலப்படத்தில் நடிப்பது என்ற தவறான எண்ணத்தை இவர்கள் உருவாக்குவது கவலைப்பட வேண்டிய விஷயம்.
Comments
Post a Comment