தனுஷ் நடிக்கும் மரியான்' படத்தின் டீசர் வெளியானது!!!

Saturday,30th of March 2013
சென்னை::பாரத் பால இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், தனுஷ் நடிக்கும் மரியான் படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் தனுஷ் மீனவர் வேடத்தில் நடிக்கிறார்.

இப்படத்தின் முதல் விளம்பரமும், டீசர் வீடியோவும் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

சோதனைகளை சந்திக்க நேரிடும் ஒரு இளைஞன், போராட்டத்தின் விளிம்பில் வாழ்வா சாவா என்று சவாலை எதிர்நோக்கி இருக்கின்றான்.

ஆனால் அந்த சவால்களை முறியடித்து தனது போராட்ட குணத்தின் மூலம் வெற்றி பெரும் கதை தான் ' மரியான்

இந்த பயணத்தில் அவனுக்கு துணையாகவும், இணையாகவும் இருப்பது அவனது காதலும் அவனது வலிமையான காதலை பற்றிய நினைவும் தான்.

வித்தியாசமான வேடங்களில் நடித்து தரமான நடிகர் என புகழப்படும் தனுஷுக்கு இணையாக பார்வதி நடித்துள்ள இப்படத்தில் இவர்களுடன் தேசிய விருது பெற்ற நடிகர்கள் அப்புக்குட்டி, சலீம் குமார் ஆகியோருடன் விநாயகம், ஜெகன், அங்கூர் விகால் மற்றும் உமா ரியாஸ் நடித்துள்ளனர்.

வந்தே மாதரம்'இசை ஆல்பம் மூலம் தேசிய அளவில் பெரும் பெயரும் புகழும் பெற்ற பரத் பாலா இப்படத்தை இயக்குகிறார். ஆஸ்கார் ரவிச்சந்திரன் பிரமாண்டமாக தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

பெல்ஜியம் நாட்டை சேர்ந்தவரும் 'ஜானி மேட் டாக்'(Johny mad dog) என்ற உலக பிரசித்தி பெற்ற படத்தின் ஒளிப்பதிவாளரும் ஐரோப்பாவின் மிக பெரிய ஒளிப்பதிவாளர்களில் ஒருவருமான மார்க் கோனிக்ஸ் (Marc koninckx) இப்படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார்.

கடலோர மீனவ கிராமங்களிலும் கடினமான ஆப்ரிக்க காடுகளிலும், பாலை வனத்திலும் இப்படம் படமாக்கப்பட்டு வருகிறது.

Comments