கிளிப்பிங்ஸ்!!!கிளிப்பிங்ஸ்!!!கிளிப்பிங்ஸ்!!!

Saturday,23rd of March 2013
சென்னை::‘ஐ’ படத்தில் மூன்றில் இரண்டுபாகம் ஷூட்டிங் முடிந்திருக்கிறது. 4 சண்டை காட்சிகள், 3 பாடல் காட்சிகள் படமாகியுள்ளது.

நாடோடிகள்’ இந்தியில் ரீமேக் ஆகிறது. பிரியதர்ஷன் இயக்கும் இப்படத்துக்கு தமிழ் மற்றும் தென்னிந்திய மொழியில் இசை அமைத்த சுந்தர் சி.பாபுவே இந்தியிலும் இசை. 4 வருடம் முன்பு இசை அமைப்பாளருக்கு கொடுத்த வார்த்தையை காப்பாற்றிவிட்டாராம் பிரியதர்ஷன். படம் இன்று ரிலீஸ்.

நடன குரு நர்த்தகி நடராஜனிடம் நடனம் கற்று கனடாவுக்கு புலம் பெயர்ந்தவர் தமிழ் பெண் அபிராமி. இவர் அஜீத், விஜய், சூர்யாவுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். ‘கனடாவில் நாங்கள் தமிழ் சினிமாவை பார்த்துதான் தமிழ் கற்கிறோம். இனிமேல் நீங்கள் ஹாலிவுட் பாணியில் சண்டை போடாமல் தமிழ் கலாசார கலை களை வெளிப்படுத்துவதுபோல நடியுங்கள்’ என்பதுதான் அது.

யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கும் 100-வது படம் ‘பிரியாணி’. கார்த்தி நடிக்க வெங்கட் பிரபு இயக்கும் இப்படத்தை தயாரிக்கும் ஞானவேல் ராஜா இப்படத்துகான ஆடியோ வெளியீட்டை பெரிய அளவில் நடத்த திட்டமிட்டுள்ளார். மலையாளம், தெலுங்கு, இந்தி படங்களுக்கு இசை அமைக்கும் பிரபல இசை அமைப்பாளர்கள் விழாவில் பங்கேற்கின்றனர்.

பாலிவுட் ஸ்டார்களில் 2012-13ம் ஆண்டுக்கான அட்வான்ஸ் வருமான வரி கட்டி முதலிடம் பிடித்திருக்கிறார் அமிதாப் பச்சன். அவர் கட்டிய தொகை ரூ.25 கோடி. இந்த நிதியாண்டில் அவர் செலுத்தும் வரி ரூ.37 கோடியை எட்டும். மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராயுடன் சேர்த்து இது மொத்தம் ரூ.51 கோடி ஆகும். சமீபத்தில் அமிதாப்பை மும்பை யில் அவரது அலுவலகத்தில் சந்தித்த வருமான வரி அதிகாரிகள் அதிக டேக்ஸ் கட்டியதற்கு வாழ்த்து தெரிவித்தனர்.

சுந்தரபாண்டியன்‘ படத்தையடுத்து ‘குட்டிப்புலி‘ படத்தில் நடிக்கும் சசிகுமார் முதன்முறையாக தெலுங்கு படத்தில் நடிக்கிறார். ‘நான் ஈ‘ படத்தில் நடித்த சுதீப் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.


கார்த்தி-ரஞ்சனி தம்பதி, தங்கள் குழந்தைக்கு உமையாள் என்று பெயரிட்டுள்ளனர்.

சசி இயக்கும் ‘555‘ படத்துக்காக சிக்ஸ் பேக் உடற்கட்டுக்கு மாறி இருக்கும் பரத் இதற்காக கடந்த 2 வருடமாக டயட் கன்ட்ரோல் இருந்து கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபட்டாராம்.

மாலத்தீவுக்கு ஜாலி சுற்றுலா சென்ற த்ரிஷா கடலுக்குள் பாய்ந்து நீந்தும் ஸ்கூபா டைவிங் செய்து சுறா மீன்களுடன் ஜோடிபோட்டு ஜாலியாக நீந்தி மகிழ்ந்தார்.

வலை படத்துக்காக மும்பையில் பிரமாண்ட செட் அமைத்து ஹோலி பாடல் காட்சி படமாக்குகிறார் விஷ்ணுவர்தன். அஜீத், ஆர்யா, நயன்தாரா பங்கேற்று நடனம் ஆடுகின்றனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார்.

ஜெய்சங்கர், கே.ஆர்.விஜயா நடித்த ‘பட்டணத்தில் பூதம்‘ படம் தமிழில் ரீமேக் ஆகிறது. இதில் சந்தானம், சிவா, பவர் ஸ்டார் நடிக்க உள்ளனர். ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தை இயக்கிய மணிகண்டன் இயக்குகிறார்.

‘லீலை‘ படத்தில் நடித்த மான்ஸி தற்போது நாடகம் மற்றும் கலைநிகழ்ச்சிகளில் பிஸியாக இருக்கிறாராம். ஷேக்ஸ்பியரின் ‘ஆல் இஸ் வெல் தட் என்ட்ஸ் வெல்‘ என்ற நாடகத்தை லண்டனில் நடத்த உள்ளாராம்.

ரஞ்சித் இயக்கும் மலையாள படத்தில் நடிக்கும் மம்மூட்டி இப்படத்தின் படப்பிடிப்புக்காக வரும் ஏப்ரல் 7ம் தேதி ஜெர்மனி செல்கிறார். ஒவ்வொரு முறையும் கோடையில் விடுமுறை எடுத்துக்கொண்டு குடும்பத்துடன் வெளிநாடு செல்லும் மம்மூட்டி இம்முறை கோடையில் ஷூட்டிங்கில் பிஸியாகி விடுவாராம்.

Comments