கிளிப்பிங்ஸ்!!!கிளிப்பிங்ஸ்!!!கிளிப்பிங்ஸ்!!!

Tuesday,26th of March 2013
சென்னை::விஷால் ஜோடியாக அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா நடிக்கும் ‘பட்டத்து யானை பட ஷூட்டிங் மதுரை, திருச்சியில் நடந்தது. பாடல் மற்றும் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன.

சிரஞ்சீவி மகன் ராம் சரண் தேஜ் பிறந்தநாளையொட்டி மனைவி உபசனா பிறந்தநாள் பரிசாக தாய்லாந்திலிருந்து வரவழைக்கப்பட்ட அழகான நாய்க்குட்டி ஒன்றை பரிசளித்தார்.

இங்லிஷ் விங்லிஷ்‘ படத்துக்கு பிறகு இந்தியில் பிரியதர்ஷன் இயக்கும் ‘ரங்ரேஸ்‘ படத்தில் நடித்த பிரியா ஆனந¢த், ‘ஃபக்ரி என்ற படத்திலும் நடித்தார்.

காதல் சந்தியா மலையாளத்தில் ‘ஃபார் சேல் என்ற படத்தில் மாடல் அழகியாக நடிப்பதுடன் தமிழில் ‘யா யா படத்தில் சந்தானம் ஜோடியாக நடிக்கிறார். மலையாளத்தில் 3 படங்களில் பாடலும் பாடுகிறாராம்.

பட இயக்கத்தில் பிஸியாக இருக்கும் பிரபு தேவா விலங்குகள் பாதுகாப்பிலும் அக்கறை காட்டுகிறார். டுவிட்டர் பக்கத்தில், ‘வெள்ளை புலி போன்ற அபூர்வமான விலங்குகளை பாதுகாக்க வேண்டும் என்கிறார்.

மலையாள தயாரிப்பாளர் லிஸ்டின் ஸ்டீபனுடன் ‘புலிவால்‘ உள்ளிட்ட மேலும் சில படங்களை இணைந்து தயாரிக்க உள்ளார் சரத்குமார்.


சிம்பு, தனுஷ் உள்ளிட்ட பல இளம் நடிகர்கள் இணையதளத்தில் டுவிட்டர் பக்கம் தொடங்கி சக நடிகர்கள் மற்றும் ரசிகர்களுடன் தொடர்பில் இருக்கின்றனர். அந்த பட்டியலில் தன்னை இணைத்துக்கொண்டிருக்கிறார் பரதேசி பட ஹீரோ அதர்வா.

இந்தியில் வெளியான ‘டெல்லி பெல்லி‘ தமிழில் சேட்டை என்ற பெயரில் கண்ணன் இயக்கி இருக்கிறார். ஆர்யா, அஞ்சலி, ஹன்சிகா நடிக்கும் இப்படத்திற்கு தணிக்கை குழு ‘யு‘ சான்றிதழ் வழங்கி உள்ளது.

உலக சுற்றுசூழல் பாதுகாப்பு தினத்தையொட்டி சர்வதேச அளவில் மின் விளக்குகள் அனைத்தையும் அணைத்து வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு சென்னை நகர எர்த் ஹவர் தூதராக ஜீவா பொறுப்பேற்றிருந்தார்.

Comments