பிரியாணி பாடல் வெளியீட்டில் முன்னணி இசை அமைப்பாளர்கள்!!!

Sunday,24th of March 2013
சென்னை::கார்த்தி, ஹன்சிகா மோத்வானி நடிக்கும் படம், ‘பிரியாணி’. வெங்கட்பிரபு இயக்கும் இந்தப் படத்தை ஞானவேல்ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். யுவனுக்கு இது நூறாவது படம் என்பதால் அதை கொண்டாட ஸ்டூடியோ கிரீன் முடிவு செய்துள்ளது. இதையடுத்து பாடல் வெளியீடு அன்று இந்தி, தெலுங்கு, மலையாள முன்னணி இசை அமைப்பாளர்களை அழைத்து விழா நடத்த இருக்கின்றனர்.

மே மாதம் விழா நடக்கிறது. அதற்கான ஏற்பாடுகளை படக்குழுவினர் செய்துவருகின்றனர். தற்போது கார்த்தி, ராஜேஷ் இயக்கும் ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ படத்தில் நடித்து வருகிறார்.

Comments