இசை ஆல்பத்தில் நடித்தவர் ஹீரோயின் ஆனார்!!!

Monday,18th of March 2013
சென்னை::இசை ஆல்பத்தில் நடித்தவர் ஹீரோயின் ஆனார். நிவின், நஸ்ரியா நாசிம் நடிக்கும் படம் ‘நேரம். அல்போன்ஸ் புத்திரன் டைரக்ட் செய்கிறார். படம் பற்றி அவர் கூறும்போது, ‘ஒருவன் வாழ்வில் உயர்ந்தாலும் அல்லது தாழ்ந்தாலும் அவனை பார்ப்பவர்கள் ‘எல்லாம் நேரம் என்பார்கள். சரியான நேரம் வந்தால் ஆண்டியும் அரசனாவான், கெட்ட நேரம் வந்தால் அரசனும் ஆண்டியாவான். இதை மையமாக வைத்துத் தான் இக்கதை அமைக்கப்பட் டுள்ளது. புதுமுகம் நிவின், மியூசிக் ஆடியோ ஆல்பங்களில் நடித்த நஸ்ரியா நாசிம் ஜோடியாக அறிமுகமாகின்றனர்.

நாசர், தம்பி ராமையா, சிம்ஹா, ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். நான் சென்னை மந்தைவெளி பகுதியில் வசித்து வந்தேன். அப்போது அங்கு நடந்த பல சம்பவங்களை பின்னணியாக வைத்துத்தான் இக்கதையை உருவாக்கினேன். தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதற்காக மந்தைவெளியிலேயே படமாக்கினேன். ராஜேஷ் முருகேசன் இசை. ஆனந்த் சி.சந்திரன் ஒளிப்பதிவு. எழுதி இயக்குவதுடன் எடிட்டிங் பொறுப்பும் நானே ஏற்றிருக்கிறேன் வின்னர் புல்ஸ் பிலிம்ஸ் மற்றும் விஸ்வநாதன் தயாரிப்பு’ என்றார்.

Comments