சத்யராஜ் படத்தில் 4 ஹீரோயின்!!!

Saturday,16th of March 2013
சென்னை::சத்யராஜ் நடிக்கும் படத்தில் 4 ஹீரோயின்கள் நடிக்கின்றனர். சத்யராஜ் நடித்த ‘அமைதிப்படை‘ 1994ம் ஆண்டு திரைக்கு வந்தது. அரசியல் கதை அம்சம் கொண்ட அப்படத்தின் 2ம் பாகமாக உருவாகிறது ‘நாகராஜ சோழன் எம்ஏ எம்எல்ஏ‘ முதல்பாகத்தை இயக்கிய மணிவண்ணன் இப்படத்தையும் இயக்குகிறார். இது இவர் இயக்கும் 50வது படம். சத்யராஜ் நடிக்கும் 200வது படம். இதுபற்றி மணிவண்ணன் கூறும்போது, ‘அமைதிப்படை முதல்பாகம் அரசியல் கதைக்களத்துடன் அமைந்தது. அதில் தகிடு தத்தங்கள் செய்து அரசியலில் முக்கிய புள்ளி ஆவார் சத்யராஜ். 2ம் பாகத்தில் முதல்வராக அவர் வேடம் ஏற்றிருக்கிறார்.

துணை முதல்வராக நான் நடிக்கிறேன். எங்களது காம்பினேஷன் என்றாலே ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். அதற்கு எந்த விதத்திலும் இப்படத்தில் ஏமாற்றம் இருக்காது. தற்போதைய அரசியல் மாற்றங்களை தொட்டிருக்கிறோம். ஆனால் யாரையும் தாக்கவில்லை. இதனால் தணிக்கையில் பிரச்னை வருவதற்கு வாய்ப்பில்லை. சிபிஐ அதிகாரி வேடமொன்றிலும் சத்யராஜ் நடிக்கிறார். மிருதுளா, கோமல் ஷர்மா, வர்ஷா அஸ்வதி, ஹன்சிபா என 4 ஹீரோயின்கள் நடிக்கின்றனர். சீமான், ரகுவண்ணன் உள்ளிட்டோருடன் பலர் நடிக்கிறார்கள். இசை ஜேம்ஸ் வசந்தன். தயாரிப்பு சுரேஷ் காமாட்சி. ரவிச்சந்திரன்‘ என்றார்.

Comments