» சில்லுன்னு ஒரு சந்திப்பு-விமர்சனம்!!!

Tuesday,19th of February 2013
சென்னை::களவாணி" விமலும், ஓவியாவும் ஒரே பள்ளியில் ப்ளஸ்-டூ படிக்கின்றனர். அதுவும் ஊட்டி கான்வெண்ட்டில் படிக்கும் இருவருக்குமிடையே காதல் கண்ணா மூச்சி காட்டும் வேளையில், ஓவியாவின் அரசாங்க அதிகாரி அப்பாவுக்கு சென்னைக்கு மாற்றம் வருகிறது! காதல் ஜோடி, கல்யாணம் செய்து வைக்க சொல்லி காவல்துறையை நாட, உங்கள் இருவருக்கும் அதற்கான வயது இன்னும் வரவில்லை, வந்ததும் உங்களிடையே இதே காதல் இருந்தால் உங்களுக்க திருமணம் செய்து வைக்க நான் தயார், அதுவரை உங்கள் தாய், தந்தையாருடன் வாழுங்கள் என்று இருவரது அப்பா-அம்மாவிடமும் அக்ரிமெண்ட் போட்டு அனுப்புகிறார் ஊட்டி இன்ஸ்!

இது பழைய கதை - புதுசு, அதே விமல், அமெரிக்காவில் கைநிறைய சம்பாதித்து ஊர் திரும்பியதும், தன் அண்ணியின் தங்கையான தீபாஷாவை லவ்வுகிறார். அவர்கள் காதல் கல்யாணத்திற்கு போகும் தருவாயில், விமலின் பழைய காதல் தீபாஷாவிற்கு தெரிய வருகிறது. அதனால் காதலுக்கு தடையை போட்டு கல்யாணத்திற்கு கட்டையை போடுகிறார் அம்மணி. விமல் மீண்டும் அமெரிக்கா கிளம்புகிறார், ஆனால் ஓவியா உண்மையை விளக்கி மீண்டும் வந்து இவர்களை சேர்த்து வைப்பது தான் "சில்லுன்னு ஒரு சந்திப்பு" கதை, களம் எல்லாம்! இந்த வித்தியாசமான கதையை எத்தனை விதங்களில் சொதப்ப முடியுமோ, அத்தனை விதங்களில் சொதப்பி காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர் ரவி லல்லின் என்பது படத்தின் பெரும் பலவீனம்!

விமல், ஓவியா, தீபாஷா, சாருஹாசன், அஸ்வின் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளத்தில் ஓவியா மட்டுமே பாஸ் மார்க் வாங்குகிறார். விமல் இனியும் சிட்டி ‌சப்ஜெக்ட்டுகளில் கவனம் செலுத்தாமல், களவாணி, வாகை சூடவா போன்ற கிராமத்து கதைகளில் கவனம் செலுத்தினால் நல்லது.

ராஜேஷ் யாதவ், ஆரோவின் ஒளிப்பதிவு, பைசலின் இசை உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகள் படத்தின் பலம். ஆனாலும் "சில்லுன்னு ஒரு சந்திப்பு" - "சுள்ளுன்னு அடிக்கிற வெயிலாக" தகிப்பது தாங்கலடா சாமி!

Comments