ஹாலிவுட் நடிகருடன் மோதும் சூர்யா!!!

Monday,18th of February 2013
சென்னை::இயக்குனர் ஹரி பாடல் காட்சிகள் தவிர்த்து வேறு எதற்கும் வெளிநாடு சென்றதில்லை. முதல்முறையாக சிங்கம் 2 படத்தில் இன்டர்நேஷனல் ப்ளேவர்.

கடல் கொள்ளையர்களாக முஸ்லீம்களை சிங்கம் 2 வில் சித்தரித்திருக்கிறார்கள். அது உண்மையாக இருந்தால் படத்தை வெளியிட அனுமதிக்க மாட்டோம் என்று ஏற்கனவே இஸ்லாமிய அமைப்புகள் மிரட்டல் விடுத்துள்ளன. கடல் கொள்ளையர்கள் முஸ்லீம்களாக இருந்தால் பாவம்... ஹரி என்ன செய்வார்.

விரைவில் இந்தப் படத்துக்காக கென்யா, தான்சானியா போன்ற நாடுகளுக்கு செல்லவிருக்கிறார்கள். இங்குள்ள வில்லன்களுடன் சூர்யா மோதுவதாக காட்சிகள் எடுக்கப்பட உள்ளன. இதற்காக கருப்பினத்தவரான ஹாலிவுட் நடிகர் Danny Sapani ஐ தேர்வு செய்திருக்கிறார் ஹரி.

Danny Sapani ஹாலிவுட்டில் துக்கடா வேடங்களில் நடித்திருக்கிறார். சில தொலைக்காட்சி தொடர்களிலும் தலைகாட்டியிருக்கிறார். முகம் தெரிந்த ஹாலிவுட் நடிகர்களுக்கு ஆசைப்பட்டு கோடிக் கணக்கில் ஏன் கொட்டித் தர வேண்டும் என்று இவரை தேர்ந்தெடுத்ததாக கிசுகிசுக்கிறார்கள்.

சிங்கம் கர்ஜிக்கிறதோ இல்லையோ எதிர்ப்பாளர்கள் உறும ஆரம்பித்துவிட்டார்கள்.

Comments