லிங்குசாமிக்கு சூர்யா கால்ஷீட் : கவுதம் மேனன் அப்செட்!!!

Wednesday,27th of February 2013
சென்னை::லிங்குசாமி இயக்கும் படத்தில் சூர்யா நடிப்பதால், கவுதம் மேனன் அப்செட் ஆகியுள்ளார். சிங்கம் 2 படத்துக்கு பிறகு கவுதம் மேனன் அல்லது லிங்குசாமி இயக்கும் படத்தில் சூர்யா நடிப்பார் என கூறப்பட்டது. ஒரு நேரத்தில் ஒரு படத்தில் நடிப்பதை பாலிசியாக வைத்திருக்கிறார் சூர்யா. அதனால் யாராவது ஒருவரின் படத்தில் மட்டும் நடிக்க அவர் முடிவு செய்திருந்தார். இந்நிலையில் கவுதமுக்கு பதிலாக லிங்குசாமிக்கு அவர் கால்ஷீட் கொடுத்திருக்கிறார். லிங்குசாமி கடைசியாக இயக்கிய பையா, வேட்டை படங்கள் ஹிட்டாயின. அதே சமயம், கவுதம் மேனனின் அறிமுக படமான மின்னலே மட்டும்தான் சூப்பர் ஹிட் படம்.

காக்க காக்க ஹிட் படமாக அமைந்தும் 100 நாட்களை தொடவே சிரமப்பட்டது. அதன் பிறகு அவர் இயக்கிய எந்த படமும் பாக்ஸ் ஆபீசில் பெரிய ஹிட்டாகவில்லை. சமீபகாலமாக காதல் கதைகள் என்ற பெயரில் அவர் இயக்கிய நீதானே என் பொன்வசந்தம் உள்ளிட்ட காதல் படங்கள் ஏ கிளாஸ் ஆடியன்சுக்கு கூட பிடிக்காமல் போனது. முதல் 2 படங்களின் இமேஜ், வித்தியாசமான இயக்குனர் என மீடியா தந்த இலவச விளம்பரம் ஆகியவை கவுதம் மேனனுக்கு சாதகமாக அமைந்தது. ஆனால் அவரது தொடர் தோல்விகளால் உஷாரான சூர்யா, கால்ஷீட்டை மாற்றி கொடுத்துள்ளார். இதனால் கவுதம் மேனன் அப்செட்டில் இருக்கிறாராம்

Comments