மார்ச் 2ஆம் தேதி 'ஜில்லா' படப்பிடிப்பு ஆரம்பம்!!!

Thursday,28th of February 2013
சென்னை::ஏ.எல்.விஜய் இயக்கத்தில் 'தலைவா' படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் விஜய், அடுத்ததாக ஆர்.பி.செளத்ரி தயாரிக்கும் 'ஜில்லா' படத்தில் நடிக்கிறார். புதுமுக இயக்குநர் நேசன் இயக்கும் இப்படத்தின் கதையைப் பற்றி நடிகர் விஜய் ஆஹா...ஒஹோ என்றும், இயக்குநர் நேசன் இப்படத்திற்குப் பிறகு தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராவார் என்றும் புகழ்ந்தார்.

அதுமட்டும் இன்றி, இப்படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். கதை தனக்கு ரொம்ப பிடித்ததால் நடிக்க சம்மதித்தேன் என்றும் அவர் கூறியிருந்தார். இதனால் இப்போதே ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்பு ஏற்படுத்தியிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் 2ஆம் தேதி தொடங்குகிறது.

Comments