கிளிப்பிங்ஸ்!!!கிளிப்பிங்ஸ்!!!கிளிப்பிங்ஸ்!!!

Wednesday, 9th of January 2013
சென்னை::இசை அமைப்பாளராகி இருக்காவிட்டால் வாழ்வில் நிச்சயம் தோல்வி அடைந்திருப்பாராம் ‘கொலை வெறி’ பாடல் இசை அமைப்பாளர் அனிரூத்.

மாடல் அழகி சனான ஓபராய் ‘நான்காம் பிறை’ படத்தில் குத்து பாடலுக்கு ஆடுவதுடன், ‘யாருடா மகேஷ்’ படத்திலும் நடிக்கிறார்.

‘நான்’ படத்தையடுத்து ‘திருடன்’ என்ற படத்தில் நடிக்கிறார் விஜய் ஆண்டனி. இப்படத்தை ‘குட்டி’ பட இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்குகிறார். இதற்கிடையில்

‘ஹரிதாஸ்’ படத்தின் இசை பணியை முடித்த ஆண்டனி ‘இருவர் உள்ளம்’ படத்துக்கான கம்போஸிங்கிலும் மும்முரமாக இருக்கிறார்.

சமீபத்தில் ஷூட்டிங்கிற்காக ஹாங்காங் சென்ற பியா அங்குள்ள பொழுதுபோக்கு பூங்காவில் ரோலர் கோஸ்டர் ரெய்டு செய்ததில் அஞ்சி நடுங்கிவிட்டாராம்.

கேமரா முன் நடிக்கும்போது மேக் அப் அணியாத பிரபுதேவா தனது தலைமுடியை மட்டும் ஒவ்வொரு காட்சிக்கும் சரிசெய்துகொண்டுதான் நடிப்பார். பாலிவுட்டில் பிஸியாக

இருக்கும் அவர் பஞ்சாபி உணவு வகைகளை விரும்பி சாப்பிடுகிறார்.
பீட்சா படத்தை இந்தியில் தயாரிக்கிறார் இயக்குனர் பிஜோய் நம்பியார். இப்படத்தை தமிழில் இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் இந்தியிலும் இயக்க விருப்பம் தெரிவித்துள்ளாராம்.

‘கடல் படத்தில் நடிக்கும் கவுதம் கார்த்திக் அடுத்து பிரபு சாலமன் இயக்கும் படத்தில் நடிக்க பேச்சு நடக்கிறது.

ஐதராபாத்தில் நடந்த இரண்டாம் உலகம் பட ஷூட்டிங்கில் பங்கேற்ற ஆர்யா எந்நேரமும் இயக்குனர் செல்வராகவனின் குழந்தை லீலாவதியுடன் விளையாடுவதிலேயே பொழுதை கழித்தாராம்.

‘கற்றது தமிழ் பட இயக்குனர் ராம் இயக்கும் ‘தங்கமீன்கள் படத்தை கவுதம் வாசுதேவ் மேனன் தயாரிக்கிறார். நீ தானே என் பொன்வசந்தம் படத்தில் கவனம் செலுத்திவந்த அவர் அப்பட ரிலீஸ் ஆனதையடுத்து ‘தங்க மீன்கள்‘ படத்தை ரிலீஸ் செய்வதில் மும்முரம் காட்டி வருகிறார்.

ஜனவரி 6ம் தேதி, இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது 47வது பிறந்தநாளை கொண்டாடினார். சிறுவயதில் இசை அமைப்பதற்காக பயன்படுத்திய பழைய கீபோர்டை இன்னும் பத்திரமாக வைத்திருக்கிறாராம்.

ஹாலிவுட் என்ற சொல்லை பார்த்து அதேபோல் பாலிவுட் என்று சொல்கிறார்கள். மேற்கத்தியர்களின் உடை பாணியை காப்பி அடித்து போட்டுக்கொண்டிருக்கிறோம். அதோடு நிறுத்திக்கொண்டிருக்க வேண்டும். திரையுலகுக்கும் பாலிவுட், கோலிவுட் என ‘வுட்’ பெயர் மாற்றங்கள் தேவையற்றது என்பது கமல் கருத்தாம்.

கார்த்தியுடன் அனுஷ்கா நடித்துள்ள ‘அலெக்ஸ் பாண்டியன்’ விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது. அடுத்து ‘சிங்கம் 2’ படத்தில் நடிக்கிறார். தவிர ‘இரண்டாம் உலகம்’,

தெலுங்கில் ‘ராணி ருத்ரம்மா தேவி’ மற்றும் எஸ்.எஸ்.ராஜ்மவுலி இயக்கும் படம் என அனுஷ்கா நடிக்கும் மூன்று படமும் சரித்திரகால பின்னணியில் அமைந்த கதைகள்.

சசிகுமார் உள்ளிட்ட டைரக்டர்கள் விஜய், அஜீத் படங்கள் இயக்க விரும்புவதைப்போல் தானும் அவர்கள் படங்களை இயக்க விருப்பமாக உள்ளதாக ஆசை வெளியிட்டிருக்கிறார் கவுதம் வாசுதேவ் மேனன்.

‘சென்னையில் ஒரு நாள்’ படம் முடிந்தது. பிப்ரவரியில் ரிலீஸ். அழுத்தமான மெசேஜுடன் இப்படத்தை தருவதற்கு பெருமையாக இருக்கிறது. பட குழுவுக்கும், இயக்குனர் சாஹித்துக்கும் நன்றி என டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார் தயாரிப்பாளர் ராதிகா சரத்குமார்.

தமிழ், கன்னடத்தில் ‘வனயுத்தம்’ பட ரிலீசை தொடர்ந்து ‘ஒன்பதுல குரு’ மற்றும் மலையாளத்தில் ‘பிரிவியூ’ என தான் நடித்த படங்கள் இந்த ஆண்டில் அடுத்தடுத்து ரிலீஸ் ஆவதை எண்ணி குஷியாக இருக்கிறாராம் லட்சுமி ராய்.

Comments