உண்ணாவிரதம் புறக்கணிப்பு: திரிஷா, நயன்தாரா, அஞ்சலி, அமலாபால் மீது நடவடிக்கை!!!

Tuesday,8th of January 2013
சென்னை::நடிகர்-நடிகைகளுக்கு மத்திய அரசு விதித்துள்ள 12.36 சதவீத சேவை வரியை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி நேற்று இந்த உண்ணாவிரதம் நடந்தது. உண்ணாவிரத போராட்டத்தில் நடிகர்- நடிகைகள் அனைவரும் தவறாது பங்கேற்க வேண்டும் என்று நடிகர் சங்கம் அழைப்பு விடுத்து இருந்தது. இதற்காகவே படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டு இருந்தன.

ரஜினிகாந்த், விஜய், விக்ரம், சூர்யா, ஜெயம்ரவி, விஷால், ஜீவா, கார்த்தி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பங்கேற்றனர். கமலஹாசன், அஜீத், தனுஷ், சிம்பு போன்றோர் உண்ணாவிரதத்துக்கு வரவில்லை. கமல் ‘விஸ்வரூபம்’ பட ரிலீஸ் வேலைகளில் பிசியாக இருந்தார். அஜீத் மும்பையில் நடந்த படப்பிடிப்புக்கு சென்று இருந்தார். சிம்புவும், தனுசும் வெளிநாடு போய்விட்டதாக கூறப்பட்டது.

திரிஷா, நயன்தாரா. அமலாபால், அஞ்சலி, ஹன்சிகா, லட்சுமிராய், லட்சுமிமேனன், பூர்ணா, குஷ்பு, ரேவதி, சந்தியா உள்ளிட்ட பல நடிகைகள் உண்ணாவிரதத்துக்கு வரவில்லை. சிலர் சென்னையில் இருந்தும் வராமல் புறக்கணித்து விட்டதாக கூறப்படுகிறது. வராதவர்கள் மீது விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்க நடிகர் சங்கத்திடம் வற்புறுத்தப்பட்டு உள்ளது.

நடிகை சரண்யா உண்ணாவிரதத்துக்கு வரமுடியாத காரணத்தை அவரது கணவர் பொன்வண்ணன் உண்ணாவிரத பந்தலுக்கு வந்து தெரிவித்தார். இதுபோல் மற்றவர்களும் கலந்து கொள்ளாததற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்படலாம் என தெரிகிறது.
1-11-12_findyour_INNER_468x60.gif

Comments