டிடிஹெச் - தோல்வி முகத்தில் கமல்ஹாசன்!!!

Tuesday,8th of January 2013
சென்னை::விஸ்வரூபத்தை திரையரங்கில் வெளியிடுவதற்கு முன் டிடிஹெச் சில் வெளியிடும் கமலின் முயற்சி தோல்வியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. தனியொரு மனிதனாக கமல் தனது முயற்சியில் போராடிக் கொண்டிருக்க அவரை ஆத‌ரிப்பவர்கள் மௌனத்தை கடைபிடிக்கிறார்கள். எதிர்ப்பவர்களோ ஆதரவை வட இந்தியா வரைக்கு; விஸ்த‌ரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

விஸ்வரூபத்தை தமிழகத்தில் 200 திரையரங்குகளிலேனும் வெளியிட விரும்பினார் கமல். ஆனால் அவர் எதிர்பார்த்த எண்ணிக்கையில் திரையரங்குகள் கிடைக்கவில்லை. ஆந்திராவில் மட்டும் தாச‌ரி நாராயணராவ் படத்தை விநியோகிக்க முன் வந்தார்.

வட இந்தியாவில் படத்தை டிடிஹெச் சில் வெளியிட்டால் திரையரங்குகள் தர மாட்டோம் என பிவிபி சினிமாஸ் கறாராக கூறியிருந்தது. அதனால் வட இந்தியாவில் டிடிஹெச் சில் படத்தை வெளியிடும் திட்டத்தை கமல் கைவிட்டார். ஆனால் கடைசி நேரத்தில் காலை வா‌ரிய பிவிபி சினிமாஸ் தென்னகத்திலும் டிடிஹெச் முயற்சியை கைவிட்டால்தான் தியேட்டர் என பல்டியடித்தது. இதனால் வட இந்தியாவில் கமலுக்கு தியேட்டரே கிடைக்கவில்லை. மேலும் வெளிநாடுகளில் விஸ்வரூபம் திரையரங்குகளில் மட்டுமே வெளியாகிறது.

க, கமலின் டிடிஹெச் முயற்சி தமிழகம், ஆந்திரா என சுருக்கப்பட்டது. எதிர்பார்த்த அளவு முன் பதிவும் இல்லை.

நேற்று காலைவரை தனது முடிவில் உறுதியாக இருந்த கமல்ஹhசனை பிவிபி சினிமாஸின் பல்டி சற்று அசைத்துவிட்டது. நேற்றிரவு திரையரங்கு உ‌ரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதன் முடிவு திரையரங்கு உ‌ரிமையாளர்களுக்கு சாதகமாக அமைந்திருப்பதாக - அதாவது கமல் தனது டிடிஹெச் முயற்சியை கைவிட முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

இன்று எந்த நேரத்திலும் கமலிடமிருந்து அறிக்கை வெளிவரலாம்.

Comments