கிளிப்பிங்ஸ்!!!கிளிப்பிங்ஸ்!!!கிளிப்பிங்ஸ்!!!

Saturday,12th of January 2013
சென்னை::ஸ்ரீதேவி நடித்த ‘ஹிம்மத்வாலா‘ இந்தி ரீமேக்கில் நடிக்கும் தமன்னா பாடல் ஒன்றுக்கு அன்று ஸ்ரீதேவி உடுத்திய காஸ்டியும் போலவே உடை அணிந்து சமீபத்தில் நடனம் ஆடினார்.

‘லைப் ஆப் பைÕ ஆங்கில படத்தில் பாடியுள்ள பாம்பே ஜெயஸ்ரீயின் தமிழ் பாடல் ஆஸ்கர் போட்டிக்கு தேர்வாகி உள்ளது. ஜெயஸ்ரீக்கு டுவிட¢டரில் வாழ்த்து கூறி உள்ளார் ஏ.ஆர்.ரகுமான்.

‘சந்தோஷ் சுப்ரமணியம்Õ படத்தில் ஜெயம் ரவி அண்ணனாக நடித்த கிரிக்கெட் வீரர் சடகோபன் ரமேஷ் அடுத்து ‘பட்டாபட்டி‘ படத்தில் ஹீரோவாக நடித்தார். 3வது படமாக சுந்தர்.சி இயக்கும் ‘மதகத ராஜா‘ படத்தில் விஷால், சந்தானத்துடன் நடித்திருக்கிறார்.

‘பிரிட்டிஷ்காரர்கள் இந்தியாவை வஞ்சித்தார்கள் என்று கூறிய நிலை மாறி இங்குள்ள சில அரசியல்வாதிகள் இந்தியாவை அழித்துவருகிறார்கள்Õ என கோபப்பட்டிருக்கிறார் அஜீத்.

சிட்னியில் தத்துவ இயல் பட்டப்படிப்பு படித்துவரும் மோகன்லால் மகன் பிரனவ் கோலிவுட்டில் நடிக்க வந்த வாய்ப்பை ஏற்க மறுத்துவிட்டாராம்.

டெல்லி மாணவி பலாத்காரத்தை மையமாக வைத்து தமிழ், தெலுங்கில் உருவாக உள்ள ‘ப்ரீடம்‘ என்ற படத்திற்கு ‘கொலை வெறி‘ பாடல் இசை அமைப்பாளர் அனிரூத் இசை அமைப்பதாக இயக்குனர் டான் கவுதம் கூறி இருந்தார். ஆனால் அப்படியொரு படத்துக்கு அனிரூத் இசை அமைக்கவில்லையாம்.

‘சூதுகவ்வும்‘ உள்ளிட்ட 4 படங்களில் நடித்து வருகிறார் ‘பீட்சா‘ ஹீரோ விஜய் சேதுபதி.

அதிகாலை 2 மணிக்குகூட போன் செய்து உரிமையுடன் பிருத்விராஜுடன் பேசும் நண்பர்கள் சிலரில் அவர் நடித்த ‘கிளாஸ்மேட்‘ உள்ளிட்ட 2 படத்தை இயக்கிய லால் ஜோஸும் ஒருவராம்.

பிரச்னைகள் முடிவுக்கு வந்து விஷால்த்ரிஷா நடிக்கும் ‘சமர்’ படம் பொங்கலையொட்டி 13ம் தேதி ரிலீசாகிறது.

Comments