விஸ்வரூபம் படத்தில் பிரபல நடிகர்களை நடிக்க வைக்காதது ஏன்? : கமல்ஹாசன் பதில்!!!

Tuesday,8th of January 2013
சென்னை::பிரபல நடிகர்களை தேர்வு செய்யாதது ஏன் என்பதற்கு பதில் அளித்தார் கமல்ஹாசன். கமல்ஹாசன் இயக்கி நடிக்கும் படம் ‘விஸ்வரூபம். இப்படத்தில் கமலை தவிர மற்ற நடிகர், நடிகைகள் இமேஜ் உள்ள நடிகர்கள் கிடையாது. இந்த வேடங்களுக்கு பிரபல நடிகர்களை தேர்வு செய்யாதது ஏன் என்பதற்கு பதில் அளித்தார் கமல். அவர் கூறியதாவது: விஸ்வரூபம் படத்தில் பிரபலமான நடிகர், நடிகைகளை நடிக்க வைக்காதது ஏன் என்கிறார்கள். படத்தில் கதைதான் முக்கியம். அதை நடிகர், நடிகையின் இமேஜ் மறைத்துவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறேன்.

மேலும் இமேஜ் உள்ள நடிகர்களுடன் வேலை வாங்கும் அளவுக்கு என்னிடம் பொறுமை கிடையாது. ஒரு இயக்குனராக திட்டமிட்டப்படி பணி நடக்க வேண்டும் என்று எண்ணினேன். அதுவே வேலைக்கு ஏற்ப ஷூட்டிங் நாட்களை மாற்றிக்கொள்வது இயலாத காரியம். இப்படம் டிடிஎச்ல் பட ரிலீஸுக்கு ஒரு நாளைக்கு முன்பாக ஒளிபரப்பாகிறது. இதற்காக ரூ.1000 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஒருமுறை மட்டுமே காட்டப்படும் இப்படத்தை யாரும் பதிவு (ரெக்கார்டிங்) செய்ய முடியாத வகையில் தொழில்நுட்பம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழில் ஒரு இணைப்புக்கு ரூ.1000 கட்டணமும், இந்தி, தெலுங்கு மொழியில் பார்க்க தலா ரூ500ம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கமல்ஹா சன் கூறினார்.

Comments