திரைப்பட துறைக்கு சேவை வரி : சரத்குமார் தலைமையில் 18 பேர் டெல்லி பயணம்!!!

Saturday,19th of January 2013
சென்னை::திரைப்பட துறையினருக்கு மத்திய அரசு சேவை வரி விதித்தது. இதை கண்டித்து திரைப்பட துறையினர் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னையில் கடந்த வாரம் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில், டெல்லி சென்று நிதியமைச்சர் சிதம்பரத்திடம் நேரடியாக முறையிடுவது என முடிவு செய்யப்பட்டது.

அதன்படி இன்று காலை 6.15 மணிக்கு சென்னையில் இருந்து விமானத்தில் நடிகர் சங்க தலைவர் சரத்குமார் தலைமையில் நடிகர் ராதா ரவி, தயாரிப்பாளர் எஸ்.ஏ.சந்திரசேகர் உள்பட 18 பேர் டெல்லி சென்றனர்.

விமான நிலையத்தில் நிருபர்களிடம் சரத்குமார் கூறியதாவது: திரைப்பட துறையின ருக்கு மத்திய அரசு விதித்துள்ள சேவை வரியை ரத்து செய்ய வேண்டும் என நாங்கள் போராட்டம் நடத்தி வருகிறோம். இதன் ஒரு கட்டமாக டெல்லி சென்று இன்று பிற்பகல் 3 மணியளவில் நிதியமைச்சர் மற்றும் நிதித்துறை செயலா ளர் ஆகியோரை சந்தித்து பேசுகிறோம். அப்போது கோரிக்கை மனு அளிப்போம். எங்களது கோரிக்கை ஏற்கப்படும் என்ற நம்பிக்கையோடு செல்கிறோம். இவ்வாறு சரத்குமார் கூறினார். இன்று இரவே அவர்கள் சென்னை திரும்புகின்றனர்.

Comments