ஜனவரி 13ஆம் தேதி 'சமர்' ரிலீஸ்!!!

Friday,11th of January 2013
சென்னை::விஸ்வரூபம் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனதால், விஷாலின் சமர் படத்திற்கு போதுமான அளவுக்கு நல்ல திரையரங்குகள் கிடைத்திருப்பதால் படத்தை ஜனவரி 13ஆம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளார்கள்.

'தீராத விளையாட்டு பிள்ளை' படத்தை இயக்கிய திரு இரண்டாவது முறையாக விஷாலை இயக்கியிருக்கும் இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக திரிஷா நடித்திருக்கிறார். மற்றொரு ஹீரோயினாக சுனைனா நடித்திருக்கிறார்.

பாலஜி ரியல் மீடியா நிறுவனம் சார்பில் ரமேஷ் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். கடந்த மாதமே இப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட போதிலும் நிதி நெருக்கடி காரணமாக படத்தை பொங்கள் பண்டிகையன்று ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் முடிவு செய்தார். ஆனால், ஆனால் அன்றைய தினத்தில் சமர் படத்திற்கு போதிய திரையரங்குகள் கிடைக்காததால் படம் வெளியாகுமா? என்ற நிலை உருவானது. இந்த நிலையில் விஸ்வரூபம் படம் ரிலீஸ் தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளதால், சமர் படத்திற்கு போதிய அளவு நல்ல திரையரங்குகள் கிடைத்திருக்கிறது.

இதனால் வரும் ஜன்வரி 13ஆம் தேதியன்று சமர் படம் வெளியாகிறது.

Comments