விஸ்வரூபம் டிடிஎச் பிரச்னை : தியேட்டர் உரிமையாளர்களுடன் பேச்சு நடத்த பிலிம்சேம்பர் முடிவு!!!

Tuesday,11th of December 2012
சென்னை::கமலின் ‘விஸ்வரூபம் படத்தை டி.டி.எச் மூலம் ஒளிபரப்புவதற்கு தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கமல்ஹாசன் தயாரித்து, இயக்கி, கதாநாயகனாக நடிக்கும் படம் ‘விஸ்வரூபம். பொங்கல் தினத்தையொட்டி இப்படம் ரிலீஸ் ஆகிறது. தியேட்டரில் ரிலீஸ் செய்வதற்கு 8 மணி நேரம் முன்னதாக டிடிஎச் மூலம் டி.வியில் ஒளிபரப்புவதற்கு கமல் முடிவு செய்துள்ளார். இந்தியாவில் இதுவரை இதுபோல் எந்த படமும் ஒளிபரப்பானதில்லை. கமலின் முடிவை கேட்டு தியேட்டர் அதிபர்கள் அதிர்ச்சி அடைந்தனர். டிடிஎச் மூலம் ஒளிபரப்புவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவரது படத்தை புறக்கணிப்போம் என்று அறிவித்துள்ளனர்.

இப்பிரச்னையால் கடந்த ஒரு வாரமாக தமிழ் திரையுலகில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதற்கு கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறும்போது, ‘வீட்டோடு தங்கியவர்களையும் சினிமா பார்க்க ஈர்க்கும் முயற்சியே இது. ஒரு முறை படத்தை பார்க்க ஆயிரம் ரூபாய் கட்டணம். காட்சியை வீட்டில் பார்த்த சந்தோஷம் தவிர தியேட்டரில் கிடைக்கும் அனுபவம் கண்டிப்பாக கிடைக்காது என்றார். இந்த பிரச்னையில் கமல்ஹாசனுக்கு பிலிம்சேம்பர் நிர்வாகிகளும், பட அதிபர்களும் ஆதரவு தெரிவித்து இருக்கிறார்கள். பிலிம் சேம்பர் செயலாளர் காட்ரகட்ட பிரசாத், ‘தியேட்டர் அதிபர்களுடன் பிலிம்சேம்பரும், தயாரிப்பாளர்கள் சங்கமும் 2 நாட்களில் பேச்சுவார்த்தை நடத்தி சுமுக முடிவு ஏற்பட வழிவகை செய்வோம் என்றார்.

Comments