மீண்டும் சசிகுமாருக்கு ஜோடியாகும் லஷ்மி மேனன்!!!

Thursday,6th of December 2012
சென்னை::'சுந்தரபாண்டியன்' வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் சசிகுமாருக்கு ஜோடியாகிறார் லஷ்மி மேனன்.

சசிகுமார் இயக்கிய ஈசன் எதிர்ப்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை என்றாலும், அவர் நடித்த 'சுந்தரபாண்டியன்' படம் அவரை நடிகராக வேறு ஒரு தளத்திற்கு கொண்டு சென்றுள்ளது. அதிரடியான வசூலை வாரிய சுந்தரபாண்டியன் படத்தை தொடர்ந்து சசிகுமார், அடுத்ததாக தனது உதவி இயக்குநர் இயக்கும் படத்தில் நடிக்கிறார். 'குட்டிப்புலி' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகளின் தேர்வு நடைபெற்றுகொண்டிருக்கிறது.

இந்த நிலையில், சுந்தரபாண்டியன் பதத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்த லஷ்மி மேனனையே இந்த படத்திலும் நாயகியாக்கலாம் என்று படக்குழுவினர் சொல்ல, அதன்படியே அவரையே மீண்டும் சசிகுமாருக்கு ஜோடியாக்கியுள்ளனர்.

Comments