நைட் பார்ட்டி வாரிசு கிளாமருக்கு தடை!!!

Thursday,6th of December 2012
சென்னை::அருந்ததி படத்துக்கு பிறகு கவர்ச்சியில் கலக்கின அனுஷ நடிகை மறுபடியும் கிளாமர் வேஷங்களுக்கு தடை போட்டிருக்காராம்...  சரித்திர பின்னணியான ஒரு கதையில் மறுபடியும் வீரமும், ஹோம்லியாவும் நடிக்க உள்ளாராம். இதுக்காக அரை வருஷத்துக்கான கால்ஷீட்டை ஒதுக்கிட்டாராம். இந்த நாட்கள்ல அசைவ உணவைகூட சாப்பிடாமல் விரதமிருக்கவும் முடிவு செஞ்சிருக்காராம்...

அலைகள் ஓயாத நடிகர், பெல் இயக்கத்தோட படத்துல தன்னோட வாரிசு நடிக்க¤றதால எந்த கவலையும் இல்லாம இருந்தாராம்... ஷூட்டிங்குக்கு எங்க போனே, எப்போ வந்தேன்னும் கேக்குறதில்லையாம். எல்லாத்துக்கும் காரணம் பெல் இயக்கத்து மேல வச்சிருக்கற நம்பிக்கைதானாம்... ஆனா அதை பயன்படுத்தி, நைட் பார்ட்டிகள்ல வாரிசு அதிகம் வலம் வர்றாராம்...

லவ் இயக்கம் இயக்கிய வழக்கு படத்துல நடிச்ச மனிஷ நடிகைக்கு பெரிசா வாய்ப்பில்லையாம்... இல்லையாம்... காத்திருந்து பாத்த நடிகை ரொம்பவே வெசனத்துல இருந்தாராம். அந்த நேரம்பாத்து மாயண்ட பேம¤லி இயக்கம் நடிகைய கூப்பிட்டனுப்பினாராம். குஷியோட ஷூட்டிங்போன நடிகைக்கு ஒரே அழுகாச்சி வேடமாம். தொடர்ச்சியா அழுதுகிட்ட இருந்த நடிகை இனிமே என்னால அழமுடியாது. பப்ளியான கேரக்டர் இருந்தா சொல்லுங்கன்னு எஸ்கேப் ஆயிட்டாராம்...

சந்தன காமெடி நடிகரோட கால்ஷீட் வேணும்னா அவரோட மேனேஜர்கிட்டதான் பேசணுமாம்... லயன் பட இயக்கம் தன்னோட படத்துல சந்தன காமெடியை நடிக்க வைக்கிறதுபத்தி மேனேஜர்கிட்ட பேசினாராம். அவரோ பிடிகொடுக்காம இழுத்தடிச்சிட்டே இருந்தாராம்...  வெறுத்துப்போன இயக்கம் நேரடியா நடிகர்கிட்டயே பேசினாராம். அப்போ மேனேஜர் இழுத்தடிச்ச மேட்டரை இயக்கம் சொன்னப்ப நடிகரு உர்ராயிட்டாராம். இது எனக்கு தெரியாதுன்னு சொன்ன நடிகரு உடனடியா கால்ஷீட் கொடுத்தாராம். அதோடு இயக்கத்தை அலைக்கழிச்ச மேனேஜருக்கு குட்பை சொல்லிட்டாராம்...

சசியான இயக்கத்துக்கு ரெண்டு மூணு படங்கள்ல ஹீரோ வாய்ப்பு வந்திருக்காம். ஏற்கனவே ஹீரோவா நடிக்கிற படத்துல அவரு பிசியா இருக்காராம். தொடர்ந்து ஹீரோ வாய்ப்பு வர்றதால அடுத்த வருஷம் டைரக்ஷன் பண்ற ஐடியாவை தள்ளிப்போட யோசிக்கிறாராம்...
கொலவெறி பாட்டு ஹிட்டானதும் நெறய ஹீரோக்களுக்கு தங்களோட கரகர குரல்ல பாட ஆசை வந்துருச்சாம்... காட்டன் வீர ஹீரோ, அருண் நடிகர் தொடங்கி, பல ஹீரோக்கள் பாட ஆரம்பிச்சிட்டாங்களாம். தங்களோட படத்துக்கு குறிப்பிட்ட மியூசிக் டைரக்டரை போடுங்கன்னு ஹீரோக்கள் பிரஷர் தர்றாங்களாம். ஹீரோ தயவுல சான்ஸ் பிடிக்கிற மியூசிக் டைரக்டருங்க ஹீரோக்களை குஷிபடுத்த பாட வைக்கிறாங்களாம்...

Comments