கார்த்தியே நடித்திருந்தாலும் இந்த பெருமை கிடைத்திருக்காது - கும்கி பட இயக்குனர் பிரபுசாலமன்!!!

Monday,10th of December 2012
சென்னை::இயக்குனர் பிரபுசாலமன் இயக்கத்திலும் திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பிலும்(முதலில் ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பதாக இருந்து, பிறகு லிங்குசாமி தயாரித்தார்.) உருவான ‘கும்கி’ படம் டிசம்பர் 14-ஆம் தேதி ரிலீஸாவது உறுதி செய்யப்பட்டுவிட்டது. ’நடிகர் திலகம்’ சிவாஜிகணேசனின் பேரனும், நடிகர் பிரபுவின் மகனுமான விக்ரம் பிரபு, லக்‌ஷ்மி மேனனுடன் ஜோடியாக நடித்திருக்கும் இந்த படத்தில் தம்பி ராமையா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

கும்கி பட பத்திரிக்கையாளர் சந்திப்பில் கும்கி படக்குழுவினர் படத்தைப் பற்றிய முக்கிய தகவல்களை பகிர்ந்துகொண்டனர். கும்கி பட இயக்குனர் பிரபுசாலமன் “ மைனா போன்ற ஒரு வெற்றிப்படம் கொடுத்ததும் எனக்கு பல பெரிய இடங்களில் இருந்து பெரிய நடிகர்களுடன் இணைய வாய்ப்பு வந்தது.

ஆனால் புதுவிதமான கதையம்சத்துடன் நான் எடுத்த படத்தை பாராட்டி ரசிகர்கள் எனக்கு கொடுத்த வெற்றியைத் தொடர்ந்து ஒரு கமெர்ஷியல் படம் எடுக்க வேண்டாம் என்று அவற்றை தவிர்த்துவிட்டேன். மறுபடியும் ரசிகர்களுக்கு ஒரு புதுவித கதைக்களத்தை உருவாக்க வேண்டும் என்ற முயற்சியில் தான் எனக்கு கும்கி என்ற சிறந்த கதை கிடைத்தது. இதற்கு நான் ரசிகர்களுக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும்” என்று கூறினார்.

பின்னர் பேசிய கும்கி பட தயாரிப்பாளர் லிங்குசாமி “கும்கி படத்தின் டிரெய்லரும், பாடல்களும் ரசிகர்களிடையே ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் டிரெய்லர் ரசிகர்களை மட்டும் கவரவில்லை பல இந்திய திரையுலக பிரபலங்களையும் கவர்ந்துள்ளது. மலையாள நடிகர் மோகன்லால், தெலுங்கு நடிகர் பிரபாஸ் மற்றும் இந்தி திரையுலக முன்னணி நடிகர்கள் சிலரும் ’டிரெய்லரே படு அமர்க்களமாக இருக்கிறது படம் எப்போது ரிலீஸ்’ என்று கேட்டிருக்கின்றனர். கும்கி படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போவதாலும், படம் ரிலீசுக்கு தயாராக இருப்பதாலும் டிசம்பர் 14-ஆம் தேதி கும்கி படத்தை ரிலீஸ் செய்ய இருக்கிறோம்” என்று கூறினார்.

கடைசியாக பேசிய ஞானவேல் ராஜா ”முதலில் ஹீரோவாக கார்த்தி நடிக்க ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் உருவாக இருந்தது கும்கி. ஆனால் சில தவிர்க்க முடியாத காரணத்தால் கார்த்தியால் நடிக்க முடியாமல் போனது, கும்கி படத்தையும் திருப்பதி பிரதர்ஸ் சார்பில் லிங்குசாமி தயாரிக்க ஆரம்பித்தார். ரிலீஸ் ஆவதற்கு முன்பே இத்தகைய வரவேற்பை பெற்றிருக்கும் கும்கி படத்தை தவறவிட்டுவிட்டோமே என்று எங்கள் யாருக்கும் எந்த கவலையும் இல்லை. சிவாஜி குடும்பமும், சிவகுமார் குடும்பமும் மிக நெருங்கிய பழக்கம் உடையவர்கள

கார்த்தி நடித்திருந்தால் அவருக்கு கும்கி மற்றுமொறு வெற்றிப்படமாக அமைந்திருக்கும். ஆனால் கார்த்தி நடிக்காமல் போனதால் சிவாஜி குடும்பத்திலிருந்து ஒரு நடிகர் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகிறார் என்பது மகிழ்ச்சியான விஷயம். இந்த படத்தை நாங்கள் வாங்கி ரிலீஸ் செய்வது எங்களுக்கு பெருமையான விஷயம். கும்கியில் கார்த்தி நடித்திருந்தால் நாங்கள் எவ்வளவு மகிழ்ச்சியடைவோமோ அதைவிட இப்போது அதிகமாக மகிழ்ச்சியடைகிறோம்” என்று கூறினார்.

Comments