ஷாம் வித்தியாசமான கெட்டப்பில் நடிக்கும் '6' படத்தின் இசை வெளியீடு!!!

Thursday,6th of December 2012
சென்னை::நடிகர் ஷாம் '6' என்ற தலைப்பில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் தலைப்பு ஆறு என்ற எண் அல்ல, ஆறு என்ற வடிவத்தில் உள்ள மெழுகுவர்த்தி. சிம்பிள் எனப்படும் குறியீடு தான் இப்படத்தின் தலைப்பு. இதன் மூலம் குறியீட்டை தலைப்பாக பயன்படுத்திய முதல் திரைப்படம் இது தான்.

எப்படியாவது முன்னண் ஹீரோக்களின் பட்டியலில் இடம் பிடிக்க வேண்டும் என்று உழைக்கும் கோடம்பாக்க ஹீரோக்களில் ஷாமும் ஒருவர். இப்படத்திற்காக தன்னை வருத்திகொண்ட ஷாம், இப்படத்தில் பல கெட்டப்புகளில் தோன்றினாலும், கண்களை வீக்கமாக வைத்துகொண்டு தோன்றும் ஒரு கெட்டப்புக்காக ரொம்பவே சிரமப்பட்டு இருக்கிறார்.

வி.இசட்.துறை இயக்க்கும் இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கிறார். இதில் ஹீரோயினாக பூனம் கவுர், அர்ச்சணா ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

இப்படத்தில் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா இன்று, சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. நடிகர் சுதீப் பாடல்களை வெளியிட, இயக்குநர் அமீர் டிரைலரை வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் நடிகைகள் சினேகா, நமீதா, விமலா ராமண், நடிகர்கள் அப்பாஸ், உதயா, பரத், வைபவ், சிட்டி பாபு, இயக்குநர் திருமலை, ஸ்ரீகாந்த் தேவா ஆகியோர் கலந்துகொண்டார்கள்.

இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் அமீரின் பிறந்தாளையும் கேக் வெட்டி கொண்டாடினார்கள்.

Comments