விஜய் என்னை விட சீனியர் நடிகர். நட்சத்திர அந்தஸ்தில் வெவ்வேறு நிலைகளில் நாங்கள் இருக்கிறோம் - சிம்பு!!!

Sunday,4th of November 2012
சென்னை::விஜய்யின் துப்பாக்கி படமும், சிம்பு நடித்த போடா போடி படமும் தீபாவளிக்கு ரிலீசாகின்றன. மெகா பட்ஜெட் படமான துப்பாக்கியுடன் போட்டியிட தயங்கி பல படங்களின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

ஆனால் சிம்பு மட்டும் தைரியமாக தனது படத்தை ரிலீஸ் செய்கிறார். துப்பாக்கிக்கு போட்டியாக தனது படத்தை இறக்குவதாக கூறப்படுகிறது.

இது குறித்து சிம்புவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

விஜய் என்னை விட சீனியர் நடிகர். நட்சத்திர அந்தஸ்தில் வெவ்வேறு நிலைகளில் நாங்கள் இருக்கிறோம். எனவே விஜய் படத்துடன் என் படத்தை ஒப்பிட்டு பேசவேண்டாம்.

இரு படங்களையும் போட்டியாக கருதவில்லை. எங்களை ஒப்பிட்டு பேச வேண்டாம். இவ்வாறு சிம்பு கூறினார்.

தீபாவளிக்கு தங்கர்பச்சானின் அம்மாவின் கைப்பேசி, கள்ளத் துப்பாக்கி உள்ளிட்ட மேலும் சில படங்களும் ரிலீசாகின்றன.

Comments