விஜய்க்கு மும்பை, அஜித்துக்கு சென்னை!!!

Thursday,22nd of November 2012
சென்னை::இவ்வளவு பெரிய ஹிட்டுக்கு பிறகு யாராக இருந்தாலும் கொஞ்சம் டயர்ட் தெரியத்தான் செய்யும். ஆனால் விஜய்..?

ஒருபக்கம் துப்பாக்கி தறிகெட்டு ஓட, இன்னொரு பக்கம் ஓய்வேயில்லாமல் அடுத்தப் படத்துக்கு தயாராகி வருகிறார்.

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் விஜய், அமலா பால் நடிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தின் டெஸ்ட் ஷுட் சென்னை ஏவிஎம் மில் நடந்தது. விஜய், அமலா பால் இருவரும் இதில் கலந்து கொண்டனர். படப்பிடிப்பு வரும் 23 ஆம் தேதி தொடங்குகிறது. முன்பு அறிவித்தது போல் வெளிநாடு எல்லாம் செல்லாமல் மும்பையில் முதல் ஷெட்யூல்டை தொடங்குகிறார்கள். விசா கிடைக்க காலதாமதம் ஆவதால் இந்த மாற்றம் என்கிறார்கள்.

PRவிஜய்யை சொல்லிவிட்டு அஜித்தை விட்டால் எப்படி. விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் நடித்துவரும் பெயரிடப்படாத படத்தின் மும்பை ஷெட்யூல்ட் முடிந்து அடுத்து சென்னையில் படப்பிடிப்பை தொடங்கவுள்ளனர். நவம்பர் 28 முதல் சென்னை ஷெட்யூல்ட் தொடங்குகிறது.

இந்தப் படத்தில் நயன்தாரா, ஆர்யா, ராணா, தாப்ஸி என பெரிய டீமே நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Comments