காதலியை கரம் பிடிக்கும் நடிகர் மிர்ச்சி சிவா!!!

Sunday,4th of November 2012
சென்னை::நடிகர் மிர்ச்சி சிவாவுக்கு திருமணம். அவர் தான் காதலித்து வந்த பேட்மிட்டன் விளையாட்டு வீராங்கனையான பிரியாவை மணந்துகொள்கிறார்.

சென்னை 6000028 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமான் சிவா, தொடர்ந்து சரோஜா, தமிழ்ப் படம், குவாட்டர் கட்டிங், கலகலப்பு உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கும் இவர் தற்போது 'தில்லு முல்லு' ரீமேக் உள்ளிட்ட இன்னும் சில படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் நடிகர் சிவாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. அவர் கடந்த ஐந்து வருடங்களாக காதலித்து வந்த பிரியா என்பவரை திருமணம் செய்துகொள்கிறார். பிரியா ஒரு பேட்மிட்டன் விளையாட்டு வீராங்கனையாவார்.

இவர்களது திருமணம் வரும் நவம்பர் 15ஆம் தேதி சென்னையில் நடக்கிறது.

Comments