தனுசுக்கு ஜோடி "செட் ஆகவில்லையாம்!!!

Tuesday,23rd of October 2012
சென்னை::43வது இந்தியன் பனோரமாவில் சிறந்த தமிழ் மொழி  படமாக, "வாகை சூடவா படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த  படத்துக்கு  தேசிய  விருது  பெற்ற, இயக்குனர் சற்குணத்துக்கு கிடைத்த, இரண்டாவது அங்கீகாரம் இது. தன்னுடைய அடுத்த படம் குறித்து, சற்குணம்  கூறுகையில், "ஜாலியான ஒரு லவ் ஸ்டோரியை எடுக்க திட்டமிட்டுள்ளேன். இந்த படத்தின் ஹீரோ, கும்பகோணத்தில் குத்து விளக்கு விற்பவராக நடிக்கிறார். ஹீரோயினாக நடிப்பவருக்கு, பல் டாக்டர் வேடம். இவர்கள் இரண்டு பேருக்கும் நடக்கும் சுவாரசியமான விஷயங்களை, ஜாலியா சொல்ல போகிறேன். இதில், தனுஷ் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிக்க, ஏற்கனவே அறிமுகமான ஒரு ஹீரோயினைத் தான், தேர்வு செய்ய திட்டமிட்டிருந்தேன். ஆனாலும், இதுவரை யாரும் செட் ஆகவில்லை, என்கிறார்

Comments