பழைய பாடல்களுக்கு மீண்டும் 'மவுசு': சேனல்கள் போட்டி போட்டு ஒளிபரப்பு!!!

Sunday,21st of October 2012
சென்னை::தமிழில் பொழுதுபோக்கு மற்றும் செய்தி சேனல்கள் கிட்டத்தட்ட 50 வரை நெருங்கிவிட்டன. இதனால் டி.வி.க்களிடையே கடும் போட்டி உருவாகி உள்ளது.

ஒவ்வொரு சேனல்களும் இசைப் பிரியர்களுக்காக தனியாக இசைச் சேனல்கள் தொடங்கி பாடல்களை ஒளிபரப்பி வருகின்றன. இவைகளில் முதலில் புதுப்பாடல்கள் ஒளிபரப்பட்டு வந்தன.

‘தேன் கிண்ணம்’, ‘நீங்கள் கேட்டவை‘, ‘உங்கள் விருப்பம்’ போன்ற நிகழ்ச்சிகளில் மட்டும் ஒன்றிரண்டு பழைய பாடல்கள் ஒளிபரப்பப்பட்டு வந்தன. ஆனால் சமீபகாலமாக ஒட்டு மொத்த சேனல்களும் பழைய பாடல்கள் பக்கம் திரும்பி உள்ளன.

ஜெயா டி.வி., ஜெயா மேக்ஸ், ஜெயா மூவி சேனல்களில் பழைய எம்.ஜி.ஆர்., சிவாஜி, டூயட் பாடல்களும் 80 களில் இளையராஜா இசையில் வெளிவந்த பாடல்களும் ஒளிபரப்பானது.

இதற்கு ஏற்பட்ட வரவேற்பை தொடர்ந்து கலைஞர் மற்றும் சன் தொலைக்காட்சிகளும் பழைய பாடல்களுக்கு என தனி சேனல்களை தொடங்கி உள்ளன. அதில் முழுக்க முழுக்க எம்.ஜி.ஆர்., சிவாஜி நடித்த கலர் படங்களின் டூயட் பாடல்கள் ஒளிபரப்பப்படுகின்றன.

இரவு நேரத்தில் மட்டும் கறுப்பு-வெள்ளை பாடல்களும் பழைய படங்களும் ஒளிபரப்பாகிறது. ஜெயா மேக்ஸ், சன், முரசு டி.வி.யை தொடர்ந்து ராஜ் டி.வி.யும், எம்.ஜி.ஆர்., சிவாஜி நடித்த டூயட் பாடல்கள் பக்கம் திரும்பி உள்ளது.

எம்.ஜி.ஆர்., சிவாஜி நடித்த படங்களில் இடம்பெற்ற டி.எம்.எஸ்.-சுசீலா குரலில் வெளிவந்த டூயட் பாடல்களுக்கு நேயர்களிடையே மிகுந்த வரவேற்பு ஏற்பட்டுள்ளது.

டி.எம்.எஸ்-சுசீலா ஜோடியின் டூயட் பாடல் குரலை திருமணம் மற்றும் திருவிழாக்களில் ஒலிபெருக்கியில் மட்டுமே கேட்டு வந்த ரசிகர்கள் தற்போது சேனல்களில் கேட்க மிகவும் விரும்புகிறார்கள். தற்போதைய இளைய தலைமுறையினர்கூட பழைய பாடல்களை விரும்பி கேட்கிறார்கள்.

எம்.ஜி.ஆர். நடித்த ‘உரிமைக்குரல்’, ‘நினைத்ததை முடிப்பவன்’, ‘உலகம் சுற்றும் வாலிபன்’, ‘மீனவ நண்பன்’, ‘ரிக்ஷாக்காரன்’, ‘இதயக்கனி’, ‘நல்லநேரம்’, ‘நம்நாடு’, ‘ஒளிவிளக்கு’, ’ஆயிரத்தில் ஒருவன்’, ‘எங்கள் வீட்டு பிள்ளை’, ‘மாட்டுக்கார வேலன்’, ‘ஊருக்கு உழைப்பவன்’ உள்ளிட்ட படங்களில் இருந்து சூப்பர் ஹிட் டூயட் பாடல்கள் திரும்ப திரும்ப ஒளிபரப்பினாலும் அவை சலிப்பு தட்டவில்லை.

இதேபோல் சிவாஜியின் ‘வசந்த மாளிகை’, ‘சிவந்தமண்’, ‘ஊட்டி வரை உறவு’, ‘டாக்டர் சிவா’, ‘அந்தமான் காதலி’, ‘திரிசூலம்’, ‘கவுரவம்’, ‘தங்கப் பதக்கம்’, ‘சொர்க்கம்’, படங்களில் இருந்தும் சூப்பர் ஹிட் டூயட் பாடல்களுக்கு மவுசு ஏற்பட்டுள்ளது.

பெரும்பாலான வீடுகளில் எம்.ஜி.ஆர்.-சிவாஜியின் பழைய பாடல்கள் ஒலிப்பதை கேட்க முடிகிறது. பழைய பாடல்களின் மவுசு புதிய பாடல்களை ஓரம் கட்ட வைத்துவிட்டது.
பழைய பாடல்களில் எம்.ஜி.ஆர்., சிவாஜியின் அழகும் ஸ்டைலும் இந்த கால இளைஞர்களுக்கு வித்தியாசமாக இருப்பதாலும் ரசிக்கிறார்கள். இப்போது எதார்த்தம் என்ற பெயரில் யார் வேண்டுமானாலும் நடிக்கலாம் என்ற நிலையில் இந்த மாமேதைகளின் உடை அழகும், டூயட் காட்சி நடிப்பும் இன்றைய இளைஞர்களுக்கும் பிடித்து போய் உள்ளது. பழைய ரசிகர்களுக்கோ தெவிட்டாத வண்ணம் உள்ள

Comments