மீண்டும் ஆர்யாவுடன் ஜோடி சேர்கிறார் நயன்தாரா: படபூஜையில் கமல் பங்கேற்பு!!!

Friday,19th of October 2012
சென்னை::நயன்தாராவும் ஆர்யாவும் ‘ராஜா ராணி’ என்ற படத்தில் ஜோடியாக நடிக்கின்றனர். ஏ.ஆர்.முருகதாஸ் இப்படத்தை தயாரிக்கிறார். அட்லி இயக்குகிறார்.

இப்படத்தின் துவக்க விழா பூஜை சென்னையில் நடந்தது. இதில் கமலஹாசன் கலந்து கொண்டு படப்பிடிப்பை துவக்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு வந்த கமலை நயன்தாரா கைகூப்பி வணங்கி வரவேற்றார்.

ஆர்யாவும் நயன்தாராவும் ஏற்கனவே பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் ஜோடியாக நடித்தனர். விஷ்ணுவர்த்தன் இயக்கும் படமொன்றிலும் இணைந்து நடிக்கின்றனர். மூன்றாவது படமாக ‘ராஜா ராணி’யிலும் சேர்ந்துள்ளனர்.

சமீபத்தில் நயன்தாராவை தனது வீட்டுக்கு அழைத்து வந்த விருந்து கொடுத்தார் ஆர்யா. இதனால் இருவரும் காதலர்கள் போல் நெருங்கி பழகுவதாக ஏற்கனவே கிசுகிசுக்கப்பட்டது.
27-7-12_findyour_INNER_468x60.gif

Comments