விவேக் நடித்த படமொன்று பாலக்காட்டு மாதவன் என்ற பெய‌ரில் வெளிவரயிருக்கிறது!!!

Tuesday,2nd of October 2012
சென்னை::வடிவேலு ஹீரோவாக ஒரு சூப்பர்ஹிட் தந்தார். கருணாஸ் சொந்தக்காசில் ஹீரோவாக பல படங்களில் நடித்தார், நடிக்கிறார். விவேக்குக்கு மட்டும் ஹீரோ அந்தஸ்து கிட்டவே வரவில்லை. அந்தக் குறை விரைவில் நிறைவேறும் போலிருக்கிறது.


விவேக் நடித்த படமொன்று பாலக்காட்டு மாதவன் என்ற பெய‌ரில் வெளிவரயிருக்கிறது. சந்திரமோகன் என்பவர் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் சோனியா அகர்வால் விவேக் ஜோடியாக நடித்துள்ளதாகவும், அவருக்கு இந்தப் படம் திருப்புமுனையாக இருக்கும் எனவும் சந்திரமோகன் தெ‌ரிவித்தார்.

கே.பாக்யராஜும் இந்தப் படத்தில் இருக்கிறார். பாக்யரா‌ஜின் அந்த 7 நாட்களில் அவரது பெயர் பாலக்காட்டு மாதவன். அந்த பெய‌ரில் நடிப்பது பெருமை என்றார் விவேக் படத்தின் அறிமுக விழாவில். இதில் செம்மீன் ஷீலாவும் முக்கிய வேடத்தில் தோன்றுகிறார்.

சின்னக்கலைவாணர், ஜனங்களின் கலைஞன் என்றுதான் இதுவரை விவேக்குக்கு அடைமொழி தந்தார்கள். இந்தப் படத்தில் பத்மஸ்ரீ விவேக் நடிக்கும் என்று விளம்பரப்படுத்தியிருக்கிறார்கள். பெயருக்கு முன்னால் பத்மஸ்ரீ என்று போடக் கூடாது என்கிறார்கள். விவேக்குக்கு இது தெ‌ரியாதோ.

Comments