மொட்டையடிக்க மறுத்த நதியா!!!

Friday,12th of October 2012
சென்னை::யுத்தம் செய் படத்தில், லட்சுமி ராமகிருஷ்ணன் நடித்த வேடத்துக்கு முதலில் கமிட்டானவர் நதியா தான் .ஆனால், அந்த வேடத்துக்கு அவசியம் மொட்டையடிக்க வேண்டும் என்று, டைரக்டர் மிஷ்கின் சொன்னதால், அப்படத்திலிருந்தே வெளியேறினார் நதியா. அதையடுத்து, சமீபத்தில் மம்மூட்டியுடன் நடித்த ஒரு மலையாள படத்திலும், பாதி படத்துக்கு பிறகு, உடல் எடையை குறைக்க வேண்டும் என்று , அப்பட டைரக்டர் சொன்னபோது, “ உடம்பை குறைத்தால், என் முக அழகு கெட்டுப் போகும்’ என்று மறுத்து விட்டாராம் நதியா. இதனால், அவருக்காக கதையில் திருத்தம் செய்து படமாக்கியுள்ளனர். 

Comments