முதலில் அஜீத்.. இப்போ விஜய் : பெரிய ஹீரோக்களுடன் கவுதம் மேனன் மோதலா!!!?

Wednesday,17th of October 2012
சென்னை::பெரிய ஹீரோக்களுடன் மோதும் போக்கை கவுதம் மேனன் கடைபிடிப்பதாக கோலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முதல் படமான மின்னலே மூலம் இண்டஸ்ட்ரியின் கவனம் ஈர்த்தவர் கவுதம் மேனன். அடுத்தடுத்து வித்தியாசமான கதைக்களத்தில் படங்களை தந்ததால் வெற்றி, தோல்வி மாறி மாறி சந்தித்தாலும் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை பெற்றார் கவுதம். இதனால் கமல்ஹாசன் முதல் முன்னணி நடிகர்கள் பலரும் அவரது இயக்கத்தில் நடிக்க விரும்பினர். ÔÔகாக்க காக்க படத்தின் மேக்கிங் ஸ்டைல் எனக்கு பிடித்திருந்தது.

அதனால் கவுதம் படத்தில் நடிக்கிறேன்ÕÕ என Ôவேட்டையாடு விளையாடுÕ பட தொடக்க விழாவின்போது கமல்ஹாசன் குறிப்பிட்டார். Ôவாரணம் ஆயிரம்Õ படத்தையடுத்து அஜீத்தை வைத்து கவுதம் படம் இயக்க பேச்சு நடந்தது. அதன் பின் அந்த புராஜெக்ட் கைவிடப்பட்டது. அதையடுத்து சிம்புவை வைத்து விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை இயக்க போய்விட்டார் கவுதம். இதற்கிடையே விஜய்யிடம் ஒரு கதையை சொன்னார் கவுதம். உடனே தனது திருப்பாச்சி, சிவகாசி, ஆதி படங்களின் சிடிகளை கொடுத்து Ôஇதில் இருக்கும் கமர்ஷியல் அம்சங்களை வைத்து ஒரு கதை பண்ணுங்கÕ என கவுதமுக்கு உத்தரவு போட்டார் விஜய்.

அதிர்ச்சியடைந்த கவுதம், இது தொடர்பாக விஜயை தாக்கி பேட்டியளித்தார். ந்நிலையில் இனி பெரிய இயக்குனர்களின் படங்களிலே நடிப¢பது என விஜய் முடிவு எடுத்தபோது, கவுதம் மேனனை அவரே அழைத¢து பேசினார். இதன் காரணமாக Ôயோவான் அத்தியாயம் ஒன்றுÕ படத்தில் இருவரும் சேர்ந்து பணியாற்ற முடிவு செய்தனர். விளம்பரங்களையும் வெளியிட்டனர். ஆனால் படம் டிராப் ஆகிவிட்டது. அஜீத், விஜய் என இருவரின் படங்களை கவுதம் கைவிட்டதற்கும் கதைதான் காரணம் என கூறப்படுகிறது.

மெதுவாக நகரும் காட்சிகள், குறைந்த வசனங்கள், வழக்கமான கமர்ஷியல் அம்சங்கள் இல்லாமை... இதுதான் கவுதம் பாணி.
இந்த பாணியை மாற்றுமாறு அஜீத், விஜய் சொன்னதால்தான் அவர் அந்த படங்களிலிருந்து விலகியதாக கூறப்படுகிறது. இதனால் பெரிய ஹீரோக்களுடன் கவுதம் மோதுவதாகவும் சொல்லப்படுகிறது. Ôஎதற்காகவும¢ கதையில் காம்ப்ரமைஸ் செய்துகொள்ளாத இயக்குனர்களில் கவுதமும் ஒருவர். குறிப்பாக பெரிய ஹீரோக்களின் கால்ஷீட்டுக்காக அவர்கள் சொல்கிறபடி ஆடாதவர் கவுதம். நல்ல சினிமாக்கள் உருவாக இதுபோன்ற இயக்குனர்கள்தான் தேவை. அப்போதுதான் நடிகர்களும் புது பாணிக்கு மாறுவார்கள்Õ என்கிறார் ஒரு மூத்த தயாரிப்பாளர்.

Comments