சென்சார் சான்றிதழை வைத்து முடிவு செய்யாதீர்கள் : பாலு மகேந்திரா!!!

Sunday,21st of October 2012
சென்னை::படத்துக்குக் கிடைத்துள்ள சென்சார் சான்றிதழை வைத்து, படம் நன்றாக இருக்குமா இருக்காதா என்று முடிவு செய்யாதீர்கள் என்று இயக்குநர் பாலு மகேந்திரா கூறியுள்ளார்.

நீர் பறவை இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் பாலு மகேந்திரா, ஒரு படம் பெற்றுள்ள தணிக்கைக் குழு சான்றிதழை வைத்து மட்டும் அந்த படம் நன்றாக இருக்கும் என்று முடிவு செய்யாதீர்கள் என்று கூறினார்.

என்னுடைய மூன்றாம் பிறை திரைப்படத்துக்கு சென்சார் போர்டு ஏ சான்றிதழ் அளித்தது. ஆனால் படம் வெளியான பிறகு அதன் நிலைமை எப்படி இருந்தது. குடும்பத்தோடு பார்க்க மூன்றாம் பிறை ஏற்ற படமல்லவா? ஏராளமான ரசிகர்களை கவர்ந்த அந்த படம், பெரிய வெற்றிப்படமாக அமைந்ததோடு மட்டுமல்லாமல், சிறந்த இயக்குநருக்கும், நடிகர் கமலுக்கும் தேசிய விருதும் பெற்றுத் தந்தது.

ஒரு படத்தைப் பார்த்த பிறகே அந்த படத்தின் தரத்தை நிர்ணயம் செய்ய முடியும். சென்சார் போர்டு மீது எனக்கு அதிக மரியாதை உள்ளது. எனினும், நான் என்ன சொல்கிறேன் என்றால், ஒரு படத்தைப் பொருத்தவரை அதன் சான்றிதழை வைத்து முடிவு செய்யாமல், படத்தைப் பார்த்து முடிவு செய்யுங்கள் என்பதேயாகும் என்று அழுத்தம் திருத்தமாகக் குறிப்பிட்டுள்ளார்.

Comments