சினிமா தியேட்டர்களில் டிக்கெட் கட்டணத்தை நிர்ணயிக்க தயாரிப்பாளருக்கு உரிமை வேண்டும் - கமலஹாசன்!!!

Wednesday,17th of October 2012
சென்னை::இந்திய சினிமா 100,வது ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பு (பிக்கி) சார்பில் மீடியா மற்றும் பொழுதுபோக்கு வர்த்தகம் தொடர்பான 2 நாள் கருத்தரங்கு, சென்னை பார்க் ஷெரட்டன் ஓட்ட லில் நேற்று தொடங்கியது. கருத்தரங்கில், டிலாய்ட் நாலெட்ஜ் ரிப்போர்ட் என்ற புத்தகத்தை ஆஸ்கர் விருது பெற்ற இயக்குனர் பேரி ஆஸ்போர்ன், நடிகர் கமலஹாசன், டிலாய்ட் இந்தியா நிறுவன இயக்குனர் சந்தீப் பிஸ்வாஸ் வெளியிட்டனர். திரைப்படங்கள், தொலைக்காட்சி, அனிமேஷன், கிராபிக்ஸ், ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, டப்பிங், இசை போன்றவற்றில் ஏற்பட்டுள்ள நவீன தொழில் புரட்சி குறித்து பல அரிய தகவல்கள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

மேலும் பயிலரங்குகள், சிறப்பு வகுப்புகள், திரைக்கதையாக்க வகுப்புகள், டிஜிட்டல் திரைப்பட உருவாக்கம், டிஜிட்டல் ஒலி நுட்பம் உள்ளிட்ட திரைப்பட துறையின் பல்வேறு பிரிவுகள் குறித்த கருத்து பதிவுகள் இடம் பெற்றுள்ளன. அப்போது நடிகர் கமலஹாசன் அளித்த பேட்டி: கூல்டிரிங்ஸ் தயாரிப்பவர்கள் தங்கள் பொருட்களின் விலையை அவர் களே நிர்ணயிக்கின்றனர்.

அதேபோல, சினிமா தியேட்டர்களில் டிக்கெட் கட்டணத்தை நிர்ணயிக் கும் உரிமையை படம் எடுக்கும் தயாரிப்பாளர்களிடம் வழங்க வேண்டும். சினிமா தியேட்டர்களில் டிக்கெட் கட்டணத்தை விட உணவு பொருட்களின் விலை அதிகமாக உள்ளது. வட இந்தியாவில் தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர்களிடம் ஒற்றுமை உள்ளது. ஒரே படத்தில் 3 பேரும் இணைந்து நடிக்கின்றனர். ஆனால், தென்னிந்திய சினிமாவில் அந்த அளவுக்கு ஒற்றுமை இல்லை. நம் வீட்டில் சாமி படம் வைத்துள்ளோம். நாம் அணியும் சட்டை பாக்கெட்டிலும் சாமி படத்தை வைத்துள்ளோம். இருந்தாலும் சாமி கும்பிட கோயிலுக்கு செல்கிறோம்.

அதேபோல், தியேட்டர்களுக்கு சென்று சினிமாவை பொதுமக்கள் பார்க்க வேண்டும். திருட்டு விசிடியை ஒழிக்க, ஒடுக்க படம் வெளியாகும்போது டிவிடி தயாரித்து கொடுக்கும் யோ சனை உள்ளது. தமிழ் சினிமாவில் ரசனையில்லை என்று குறை சொல்ல முடியாது. தென் இந்தியாவில் தான் 65 சதவீத படங்கள் உருவாகின்றன. உலகிலே யே மிக பெரிய சினிமா துறை தென் இந்தியாவில் தான் உள்ளது. இவ்வாறு கமலஹாசன் கூறினார்.

Comments