புஸ்ஸாகிப் போன எஸ்.ஏ.சி - பொதுக்குழுவை நடத்த கேயாருக்கு நீதிமன்றம் அனுமதி!

Friday,26th of October 2012
சென்னை::தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தை நடத்த கேயாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

சமீபகாலமாக தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் ஏகப்பட்டப் இரச்சனைகள் எழுந்துள்ளது. தற்போது சங்கத்தின் தலைவராக இருக்கும் எஸ்.ஏ.சந்திரசேகரனை எதிர்த்து தனி அணி ஒன்று உருவாகியுள்ளது. இந்த அணிக்கு தலைமை வகிக்கும் கேயார், வரும் அக்டோபர் 28ஆம் தேதி சங்கத்தின் பொதுக்குழுவை கூட்டப்போவதாக அறிவித்திருந்தார்.

இதை எதிர்த்து சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு போட்ட எஸ்.ஏ.சந்திரசேகர், "குறிப்பிட்ட இடைவெளியில் பொதுக்குழு கூட்டப்பட வேண்டும். விதிகளுக்கு முரணாக கேயார் தரப்பினர் பொதுக்குழுவை கூட்டுகின்றனர். எனவே அவர்கள் பொதுக்குழு கூட்டுவதற்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும். என்று அந்த மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவின் அடிப்படையில் கேயார் செயற்குழு கூட்டம் நடத்த நீதிமன்றம் தடை விதித்தது. இதைத் தொடர்ந்து இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் கேயார் வழக்கு தாக்கல் செய்தார். அதில், "விதிகளின் அடிப்படையில் தான் பொதுக்குழு கூட்டத்தை நடத்த இருக்கிறோம். அதற்கான அறிவிப்புகளை முறைப்படி கொடுத்துள்ளோம். அறிவிப்பை சங்க நிர்வாகிகள் பெற்றுக்கொண்டதற்கன ஆதாரங்கள் இருக்கின்றன. எனவே சிட்டி சிவில் நீதிமன்றம் உத்தரவை ரத்து செய்துவிட்டு, எங்களுக்கு பொதுக்குழு கூட்டம் நடத்துவதற்கான அனுமதியை வழங்க வேண்டும்." என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சிட்டி சிவில் நீதிமன்றம் பிறப்பித்த தடையை நீக்கி, வரும் 28ஆம் தேதி மனுதாரர் பொதுக்குழு கூட்டத்தை நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இந்த பொதுக்குழு கூட்டம் ஓய்வுபெற்ற நீதிபதியின் முன்னிலையில் நடைபெற வேண்டும் என்றும், கூட்டம் நடக்குக்போது சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படாத வகையில், உரிய பாதுகாப்பை சென்னை போலீஸ் கமிஷ்னர் வழங்க வேண்டும் என்றும் கூறினார்

Comments