தங்கர் பச்சான் வரவர தகராறு பச்சான் ஆகிவிட்டார். அவரது புலம்பல்கள் அவர் படத்தை விட அதிகம்!!!

Thursday,4th of October 2012
சென்னை::தங்கர் பச்சான் வரவர தகராறு பச்சான் ஆகிவிட்டார். அவரது புலம்பல்கள் அவர் படத்தை விட அதிகம் விமர்சனங்களுக்குள்ளாகி வருகின்றன.

ஏற்கெனவே தான் எடுத்த களவாடிய பொழுதுகள் வெளிவராத கோபத்தில் உள்ள தங்கர், இப்போது சாந்தனு- இனியா ஜோடியாக நடிக்கும் படம் அம்மாவின் கைப்பேசி படத்தைத் தயாரித்து வருகிறார்.

இந்தப் படம் வியாபாரமாகாத கோபத்தை சமீபத்தில் நடந்த பிரஸ் மீட்டில் கொட்டித் (திட்டி) தீர்த்தார்.

எதற்கெடுத்தாலும், ஏங்க என்னங்க நடக்குது இங்கே என்று அவர் கேட்டுக் கொண்டே இருந்ததில் கடுப்பான நிருபர்கள், "ஏங்க என்னதாங்க ஆச்சி இந்த தங்கருக்கு?" என்று கேட்டபடி கலைந்து சென்றனர்.

தங்கரின் புலம்பலில் ஒரு பகுதி:

ஏங்க...என்னங்க நடக்குதிங்கே.. ஒருத்தனும் சரியில்ல... சினிமாவே சரியில்ல. படங்கள் எடுக்க தயாரிப்பாளர்கள் கிடைப்பது கஷ்டமாகிவிட்டது. நாலைந்து தயாரிப்பாளர்கள்தான் இப்ப படங்கள் எடுத்துகிட்டு இருக்காங்க. அவர்களும் கடனை தீர்க்கத்தான் படம் தயாரிக்கிறாங்க. தொழில்னா லாபம் வரணும். சினிமாவும் தொழில்தான் நிறைய பேர் இங்கு நஷ்டம்தான் சந்திக்கிறார்கள்.

அழகி, பள்ளிக்கூடம், சொல்ல மறந்த கதை, ஒன்பது ரூபாய் நோட்டு என நல்ல படங்களை எடுத்தேன். நிறைய பேர் பாராட்டினார்கள். ஆனால் தொடர்ந்து படம் எடுக்க தயாரிப்பாளர்கள் கிடைக்கவில்லை. இதைவிட சமூகத்துக்கு பயன் தரக்கூடிய வகையில் நான் என்ன செய்ய முடியும்.

தயாரிப்பாளர்கள் அமைந்தாலும் கூட நடிகர்கள் கிடைக்கிறதில்லை. இங்க நடிகர்கள்ல எவனுமே நல்ல கதையில நடிக்க தயாராயில்லே. அதனாலதான் நானெல்லாம் நடிச்சித் தொலைக்க வேண்டியிருக்கு. ஒவ்வொரு படத்துக்கும் போராடத்தான் செய்கிறேன். மக்களுக்கு தேவையில்லாத படங்களுக்கு கோடி கோடியாய் கொட்டுகிறார்கள்.

ஒரு பாடலுக்கு ரூ. 6 கோடி செலவு செய்றாங்க. ஆனால் பாரதி படம் எடுத்ததற்கு மொத்த செலவே ரூ. 1.5 லட்சம்தான். நல்ல படங்கள் எடுப்பதற்கு நிறைய நெருக்கடி இருக்கு.

இங்க இசையமைப்பாளர்கள் யாரும் சரியில்லைங்க. காசு நிறைய கேக்குறாங்க. மியூசிக்கும் சரியிலீங்க. பாட்டுப்பாடறவங்க. குரல் இன்னும் கேவலம். பல சமயங்கள்ல பாடுறது ஆம்பளையா,பொம்பளையான்னு கூட தெரியலை.

என்னங்க நடக்குது இங்க?

Comments