ஐடியா தரும் ஹீரோயின் : மைக்கை உடைச்ச இயக்கம்!!!

Tuesday,23rd of October 2012
சென்னை::காஜல் ஹீரோயினுக்கு நாயகனை கட்டிப்பிடித்து மரத்தை சுற்றி லவ் டூயட் பாடி போரடிச்சிருச்சாம்... இனி வர்ற படங்கள்ல ஆக்ஷன் சீன்ல நடிக்க¤றதுக்கு தன்னை தயார்படுத்திட்டு வர்றாராம். பாலிவுட்ல அக்ஷய நடிகரோட நடிச்சப்போதான் இந்த யோசனை உதிச்ச¤தாம். புதுசா கதை சொல்லவர்ற இயக்குனருங்ககிட்ட எனக்கு ஆக்ஷன் காட்சிகள் நிறைஞ்ச கதை இருந்தா சொல்லுங்க.. பண்ணலாம்னு ஐடியா கொடுக்க¤றாராம்...

தொப்பி போட்ட பாலு இயக்கம் சமீபமா நெறைய பங்ஷன்ல கலந்துக்குறாராம்... இப்பல்லாம் பாலு இயக்கம் மீடியாக்காரங்க மேல உர்ரா இருக்காராம். போன மாசத்துல நடந்த பங்ஷன்ல மீடியா விமர்சகர்களை தாக்கி பேச¤னாராம். சமீபத்துல, Ôஉங்கள அறிமுகப்படுத்திக் கிட்டு பேசுங்கÕன்னு மீடியாக்காரர் ஒருத்தர் மைக் கொடுத்ததும் கோபத்துல அந்த மைக்க அடிச்சி உடைச்சிட்டாராம். ‘இத்தன வருஷமா இண்டஸ்ட்ரில இருக்கேன். என்னய யாருன்னு அறிமுகப்படுத்திட்டு பேசறளவுக்கு நான் காணாம போயிடலÕன்னு பாய்ஞ்சிட்டராம்...

2 வருஷத்துக்கு 7 படம் தயாரிப்பேன்னு வீராப்பா அறிவிச்சிட்டாரு செல்வராகவ இயக்கம். ஆனா அதுக்கு எப்படி பைனான்ஸ் பிடிக்கிறதுன்னு ரூம் போட்டு யோசிச்சிட்டு இருக்காராம்... ஏதாவது பாலிவுட் கம்பெனியோட டைஅப் போடலாம¢னு நெருங்கியவங்க அட்வைஸ் பண்றாங்களாம்... இயக்கமும் அந்த முயற்சியில இறங்கப்போறாராம்...
மிரட்ற படத்துல நடிச்ச சான்டல்வுட் ஷர்மி நடிகை இப்ப சான்டல்வுட் பக்கம் தலை காட்றதில்லையாம்... அடுத்து கோலிவுட் பட ஸ்கிரிப்ட் கேக்க தயாரா இருக்கறதா இயக்கங்களுக்கு தூது அனுப்புறவருக்கு டோலிவுட்ல நரேஷான ஹீரோவோட நடிக்க சான்ஸ் கெடச்சிருக்காம். கோலிவுட், டோலிவுட்லேயே கொஞ்ச நாள் நீடிச்சா லக்குல டாப் ஹீரோயின் லிஸ்டுக்கு போயிடுவேன்னு சொல்றாராம்...

முரணான படத்துல நடிச்ச ப்ரியமான ஹரி நடிகைக்கு கோலிவுட்ல வேற வாய்ப்பு கெடக்கலயாம்... ஆனா டோலிவுட்ல ஒரு படத்துல டபுள் ரோல்ல நடிக்க¤றாராம். இதுல ஒரு ரோல் ஹீரோவுக்கு தரும் இமேஜ்போல சூப்பர் வேஷமாம். இந்த மேட்டர தன்னைவிட படத்துல நடிக்கற வருணான ஹீரோதான் ஊர் முழுக்க பரப்பிட்டிருக்காராம். இதுல குஷியான அம்மணி வருண ஹீரோவை அன்போடு பாக்குறாராம்...அவரும் அதே பாணில லுக் விட்றாராம். இப்படி பாத்துகிட்டிருந்தா காதல்ல போய் முடிஞ்சிடும் ஜாக்கிரதைன்னு தோழிங்க நடிகைக்கு எச்சரிக்கை பண்றாங்களாம்...

சமீபத்துல ரீ என்ட்ரி கொடுத்த ஸ்ரீ நடிகையோட படத்துல பைசா வாங்காம தல நடிகர் நடிச்சி கொடுத்தாரு. இதுல உச்சி குளுந்த நடிகை, தல படத்துல தன்னை நடிக்க கேட்டா நிச்சயமா நடிப்பேன்னு சொல்றாராம். சொல்லப்போனா, அவர் படத்துல ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆடவும் தயாருன்னு ஸ்டேட்மென்ட் விடுறாராம்...

Comments