பட்டோடி அரண்மனையில் விழாக்கோலம்: கரீனாகபூர் திருமணத்தில் ஜனாதிபதி பங்கேற்பு!!!

Monday,8th of October 2012
சென்னை::கரீனா கபூருக்கும், சயீப் அலிகானுக்கம் திருமணம் நிச்சயமாகியுள்ளது. இருவரும் இந்தி திரையுலகில் முன்னனி நட்சத்திரங்களாக உள்ளனர். சயீப் அலிகானின் தாய் சர்மிளா தாகூர் இந்தியில் முன்னனி கதாநாயகியாக இருந்தவர். இவருக்கும் கிரிக்கெட் வீரர் மன்சூர் அலிகான் பட்டோடிக்கும் 1967-ல் திருமணம் நடந்தது.

பட்டோடியின் 9-வது நவாப் மன்சூர்அலிகான் ஆவார். கரீனா கபூர், சயீப் அலிகான் திருமணம் பட்டோடி அரண்மனையில் வருகிற 16-ந் தேதி நடக்கிறது. பின்னர் மும்பையிலும், டெல்லியிலும் திருமண வரவேற்பு நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன.

திருமணத்துக்காக பட்டோடி நவாப் அரண்மனை புதுப்பிக்கப்பட்டு வருகிறது. நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் இரவு, பகலாக வேலை பார்க்கின்றனர். நகைகள், துணிமணிகள் வாங்கப்பட்டு வருகின்றன. பிரபல ஆடை வடிவமைப்பாளர் ரிதுகுமார் முகூர்த்த சேலையை தயார் செய்து வருகிறார். பட்டோடி அரண்மனை இப்போதே விழாக்கோலம் பூண்டுள்ளது.

திருமணத்தில் அரசியல்வாதிகள், நடிகர்கள், நடிகைகள், தொழில் அதிபர்கள் பங்கேற்கின்றனர். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியும் திருமணத்தில் கலந்து கொள்கிறார். சர்மிளா தாகூர் ஜனாதிபதி மாளிகைக்கு சென்று பிரணாப் முகர்ஜியிடம் திருமண அழைப்பிதழை நேரில் கொடுத்து அழைப்பு விடுத்தார். அவரும் திருமணத்துக்கு வருவதாக உறுதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது. பிரணாப் முகர்ஜியும், மன்சூர் அலிகான் பட்டோடியும் நீண்ட கால நண்பர்கள் ஆவர்.

Comments