கிளிப்பிங்ஸ்!!!கிளிப்பிங்ஸ்!!!கிளிப்பிங்ஸ்!!!

Wednesday, 3rd of October 2012
சென்னை::தமிழிலிருந்து மலையாளத்திற்கு சென்ற நடிகர் பாலா, தற்போது ‘ஹிட் லிஸ்ட்Õ என்ற படத்தை நடித்து இயக்குகிறார். இதில் ‘காதல்Õ சந்தியா ஹீரோயின்.


நீண்ட இடைவெளிக்கு பிறகு ‘ஜான்லேவா 555Õ என்ற பாலிவுட் படத்தில் நடிக்கிறார் வைஜெயந்திமாலா. இப்படத்தை சந்தீப் மாலினி இயக்குகிறார். சென்னையில் உள்ள வைஜெயந்தி மாலா வீட்டில் இப்படத்துக்கான ஷூட்டிங் சமீபத்தில் நடந்தது.

வெங்கட்பிரபு இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘பிரியாணிÕ பட ஷூட்டிங் ஆம்பூரில் இந்த வாரம் தொடங்குகிறது.

தமிழ், தெலுங்கில் ராணா, நயன்தாரா நடிக்கும் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆட ஒப்புக்கொண்டிருக்கிறார் சமீரா ரெட்டி.

நான் ஈ பட இயக்குனர் ராஜமவுலி உடல் உறுப்பு தானம் செய்திருக்கிறார். அதற்கான நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்துள்ளார்.

Comments