எனக்கு யாருடைய சிபாரிசும் தேவையில்லை - ஓவியா விளக்கம்!!!

Thursday,4th of October 2012
சென்னை::களவாணி படத்தில் அறிமுகமான ஓவியாவுக்கு நடிகர் விமல், தான் நடிக்கும் படங்களில் சுபாரிசு செய்வதாக கிசுகிசுக்கப்பட்டது. இதற்கிடையில் விமல், ஓவியா இணைந்து நடித்திருக்கும் 'சில்லுன்னு ஒரு சந்திப்பு' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பிலும் விமலிடம் இதைப் பற்றி கேட்கப்பட்டது.

இதற்கு மறுப்பு தெரிவித்த விமல், "இனி ஓவியாவுடன் நான் நடிக்க மாட்டேன்." என்றும் அறிவித்து விட்டார். இந்த நிலையில் நடிகை ஓவியாவும் இதுபற்றி விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து கூறிய ஓவியா, "எனக்கு விமல் வாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறப்படுவதில் உண்மையில்லை. எனக்காக வேறு எந்த நடிகர்களும் வாய்ப்பு தேடியும் அலையவில்லை. அதற்கான அவசியமும் இல்லை. இயக்குநர்கள் தான் எனக்கு வாய்ப்பு தருகிறார்கள். அவர்கள் கதைக்கு நான் பொருத்தமாக இருப்பேன் என்று கருதியதால் என்னை அணுகி வாய்ப்பு தருகிறார்கள். மற்றபடி யாருடைய சிபாரிசிலும் எனக்கு வாய்ப்பு கிடைக்க வில்லை. இனி விமலுடன் நானும் நடிக்க மாட்டேன்." என்றார்.

Comments