பாலாவின் பாசறைக்குள் அக்னிநட்சத்திர வாரிசுகள்!!!

Friday,19th of October 2012
சென்னை::பாலாவின் பரதேசியில் அதர்வா இடம்பிடித்து விட்டதைத் தொடர்ந்து, அடுத்து அவர் இயக்கப்போகும் படத்தில் நடிக்கப்போகிற அதிர்ஷ்டசாலி நடிகர் யார் என்ற டாபிக் கோலிவுட்டில் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. மீண்டும் விக்ரமையே அழைப்பாரா? இல்லை சூர்யாவை கூப்பிடுவாரா? என்றெல்லாம் ஆளாலுக்கு ஆரூடம் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில், அடுத்து முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கப்போவதில்லை. மீண்டும் அதர்வா மாதிரியே ஒன்றல்ல இரண்டு வாரிசு நடிகர்களை என் படத்தில் நடிக்க வைக்கப்போகிறேன் என்று ஒரு குபீர் தகவலை அனல் பறக்க வெளியிட்டுள்ளார் பாலா. அது யாராக இருக்கும்? என்று மூளையை கசக்க வேண்டாம் என்பதற்காக, பிரபுவின் மகன் விக்ரம் பிரபு. கார்த்திக்கின் மகன் கெளதம் ஆகிய இருவருக்கும்தான் அடுத்து சான்ஸ் தரப்போகிறேன் என்றும் கூறியுள்ளார் பாலா. இதன்காரணமாக, அடுத்து தரணி இயக்கத்தில் நடிக்கயிருந்த அக்னி நட்சத்திரம் ரீமேக்கில் நடிப்பதா? இல்லை டீலில் விடுவதா? என்று இரண்டு வாரிசு நடிகர்களும் ஆலோசித்து வருகின்றனர்.

Comments